'ஜண்டா மாத்ரே'... இந்த மத்திரம் ஞாபகம் இருக்கும்; அம்மன் பட வில்லன் சாய்பாபா கேரக்டரில் நடித்தது தெரியுமா?

அம்மன் படத்தில் மந்திரம் ஓதும்போது அவர் சொல்லும் 'ஜண்டா மாத்ரே' என்ற வார்த்தையை கேட்டால் இன்றைக்கும் பதற்றம் வரும் அளவுக்கு கம்பீரமாக பேசியிருப்பார்.

அம்மன் படத்தில் மந்திரம் ஓதும்போது அவர் சொல்லும் 'ஜண்டா மாத்ரே' என்ற வார்த்தையை கேட்டால் இன்றைக்கும் பதற்றம் வரும் அளவுக்கு கம்பீரமாக பேசியிருப்பார்.

author-image
WebDesk
New Update
Gurak

தென்னிந்திய சினிமாவில் பக்தி படங்கள் அதிகம் படையெடுத்து வந்த காலக்கட்டத்தில் அந்த படங்களில் முக்கிய வில்லனாக இருந்தவர் தான் ராமி ரெட்டி. படத்தில் இவரை கண்டாலே இப்போதும் 90-எஸ் கிட்ஸ்கள் மத்தியில் ஒருவித பதற்றம் இருக்கத்தான் செய்கிறது, அந்த அளவிற்கு நடிப்பில் மிரட்டிய ராமி ரெட்டி படிப்பிலும் டாப்பர் தான். 1959-ம் ஆண்டு சித்தூரில் பிறந்த இவர், ஐதரபாத்தில், ஜர்னலிசம் முடித்து ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்துள்ளார்.

Advertisment

சினிமா மீது இருந்த ஆர்வத்தின் காரணமாக, வேலையை விட்ட ராமி ரெட்டி, சினிமா வாய்ப்பு தேடி தயாரிப்பு நிறுவனங்களுக்கு செல்ல தொடங்கியுள்ளார். அப்போது இவருக்கு 1990-ம் ஆண்டு டாக்டர் ராஜசேகர் நடிப்பில் வெளியான அனுக்ஷம என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தில், அவர், பேசிய 'ஸ்பாட் பெடதா' என்ற வார்த்தை இன்றும் பிரபலமான வசனமாக நிலைத்திருக்கிறது.

தொடர்ந்து கன்னடம், மலையாளம், மொழிகளில் நடித்து வந்த ராமி ரெட்டி, ராமராஜன் நடிப்பில், 1991-ம் ஆண்டு வெளியான நாடு அதை நாடு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தில் வில்லன் கேரக்டரில் நடித்து பாராட்டுக்களை பெற்ற அவர், அடுத்து தமிழுக்கு வந்தது அம்மன் படம் மூலமாகத்தான். தெலுங்கில் வெளியான, அம்மொரு என்ற படத்தின் தமிழில் டப் செய்யப்பட்டது தான் அம்மன் படம். சௌந்தர்யா, சுரேஷ், வடிவுக்கரசி இணைந்து நடித்த இந்த படத்தில் கோரக் என்ற கேரக்டரில் ராமி ரெட்டி நடித்திருந்தார்.

படத்தில் அவர் பெயர் கோரக் என்றாலும், அவர் சொல்லும் ஜண்டா என்ற வசனம் தான் இன்றுவரை ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளது. குறிப்பாக, மந்திரம் ஓதும்போது அவர் சொல்லும் 'ஜண்டா மாத்ரே' என்ற வார்த்தையை கேட்டால் இன்றைக்கும் பதற்றம் வரும் அளவுக்கு கம்பீரமாக பேசியிருப்பார். அம்மன் படம் தமிழிலும், தெலுங்கிலும் ராமி ரெட்டிக்கு பெரிய பாராட்டுக்களையும் பட வாய்ப்புகளையும் அள்ளிக்கொடுத்தது என்று சொல்லலாம்.

Advertisment
Advertisements

Rami reddy

அதன்பிறகு 1998-ல் துள்ளி திரிந்த காலம், 1999-ல் நெஞ்சினிலே ஆகிய தமிழ் படங்களில் நடித்திருந்தார். விஜய் நடிப்பில் வெளியான நெஞ்சினிலே படம் தான் இவர் தமிழில் நடித்த கடைசி படமாகும். பேய் படங்களில் வில்லன் மட்டும் இல்லாமல், குருவரம் என்ற படத்தில சாய்பாபா கேரக்டரிலும் நடித்து அசத்தியுள்ளார். இந்த படம் இன்றுவரை அவருக்கு பெரிய அடையாளமாக இருக்கிறது, நடிகராக இருந்த இவர் ஒரு கட்டத்தில் தயாரிப்பாளராகப மாறினார். அங்குதான் இவருக்கு பெரிய சறுக்கல் ஏற்பட்டது.

சொந்த பணத்தை வைத்து இவர் தயாரித்த படங்கள் வரிசையாக தோல்வியை தழுவியுள்ளது. இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான ராமி ரெட்டி உடல்நலம் பாதிக்கப்பட்டு, வில்லனாக மிரட்டிய தனது கட்டுமஸ்தான உடற்கட்டை இழந்து மெலிந்த நிலைக்கு சென்றார். ஒரு கடத்தில் கல்லீரல் பிரச்னைக்கு ஆளான ராமிரெட்டி மருத்துவ செலவுக்கு கூட பணம் இல்லாமல் தனது 52 வயதில், 2011-ம் ஆண்டு மரணமடைந்தார். இப்போது இவர் இல்லை என்றாலும் அவர் நடித்த கேரகடர்கள் திரைப்படங்கள் இருக்கும்வரை மக்கள் மனதில் நிலைத்திருக்கும்.

Tamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: