கடவுள் கொடுத்த வரம், எனக்காக இதை செய்தார்; புகழ்ந்து தள்ளிய ரவி மோகன்: கண்ணீர் விட்ட கெனிஷா!

இந்த புதிய முயற்சிக்கு பெரும் உதவியாக இருந்த  கெனிஷா பற்றி மனம் திறந்து பேசினார். "இந்த முழு நிகழ்ச்சியையும் அவள்தான் எனக்காக ஏற்பாடு செய்தாள்.

இந்த புதிய முயற்சிக்கு பெரும் உதவியாக இருந்த  கெனிஷா பற்றி மனம் திறந்து பேசினார். "இந்த முழு நிகழ்ச்சியையும் அவள்தான் எனக்காக ஏற்பாடு செய்தாள்.

author-image
WebDesk
New Update
Kenisha Jayam ravi

தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களை கொடுத்த ஜெயம் ரவி சமீபத்தில் தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக அறிவித்து தனது பெயரையும் ரவி மோகன் என்று மாற்றிக்கொண்டார். அதன்பிறகு பாடகி கெனிஷாவுடன், ஐசரி கணேஷ் இல்ல திருமணத்தில், பங்கேற்று பரபரப்பை ஏற்படுத்திய ரவி மோகன், தற்போது சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார்.

Advertisment

சென்னையில் நடைபெற்ற ரவி மோகனின் தயாரிப்பு நிறுவனத்தின் பிரமாண்டமான தொடக்க விழாவில், கர்நாடக நடிகர் சிவராஜ்குமார், கார்த்தி, சிவகார்த்திகேயன், ஜெனிலியா, எஸ்.ஜே. சூர்யா, அதர்வா, யோகி பாபு உட்பட பல முக்கிய பிரபலங்கள் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர். இந்த விழாவானது, ஒரு புதிய தொழில் பயணத்தின் தொடக்கம் மட்டுமல்லாமல், ஜெயம் ரவியின் தனிப்பட்ட வாழ்க்கையின் சில உணர்ச்சிகரமான தருணங்களையும் வெளிப்படுத்தியது.

இந்த விழாவின் முக்கிய தருணமாக, ரவி மோகன் தனது பேச்சு அமைந்தது. தனது இந்த புதிய முயற்சிக்கு பெரும் உதவியாக இருந்த  கெனிஷா பற்றி மனம் திறந்து பேசினார். "இந்த முழு நிகழ்ச்சியையும் அவள்தான் எனக்காக ஏற்பாடு செய்தாள். இதற்கு முன்பு யாரும் இதை எனக்கு செய்ததில்லை. இன்று இவ்வளவு பேர் வருவார்களா என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் அவள் அதை சாத்தியமாக்கினாள். அவள் தான் என் இந்த பயணத்தில் எனது துணை" என்று கூறினார்.

Advertisment
Advertisements

மேலும், வாழ்க்கை தேக்கமடைந்துவிட்டது என்று உணரும்போது, கடவுள் ஒருவரை அனுப்புவார் என்று சொல்வார்கள் - அவள்தான் என் வாழ்க்கையில் கிடைத்த அந்த பரிசு. ஒவ்வொரு ஆணுக்கும் கெனிஷா போன்ற ஒரு பெண் கிடைக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்" என்று உணர்ச்சிப்பூர்வமாகப் பேசியபோது, கெனிஷாவுக்குக் கண்களில் கண்ணீர் பெருகியது. இந்த நிகழ்வில், ரவி மோகன் தனது தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படத்தையும் அறிவித்தார். முதல் படமாக, யோகி பாபு நடிக்க, ரவி மோகன் இயக்குவார் என்று அறிவிக்கப்பட்டது. தனது நீண்டகால திட்டங்களாக, எதிர்காலத்தில் தனது மகனை இந்த நிறுவனத்தின் மூலம் அறிமுகப்படுத்தவும் தான் விரும்புவதாகக் கூறினார்.

ஜெயம் ரவியின் புதிய பயணம் ஒருபுறம் இருக்க, அவரது தனிப்பட்ட வாழ்க்கையும் பெரும் சர்ச்சையாக அமைந்துள்ளது. பாடகி கெனிஷாவுடன் அவர் திருப்பதிக்குச் சென்ற பிறகு, அவரது மனைவி ஆர்த்தி ரவி தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஒரு மர்மமான பதிவை வெளியிட்டார். "உங்களால் கடவுளை ஏமாற்ற முடியாது. நீங்கள் மற்றவர்களை ஏமாற்றலாம். உங்களையே கூட ஏமாற்றிக் கொள்ளலாம். ஆனால், கடவுளை உங்களால் ஏமாற்ற முடியாது" என்று அவர் பதிவிட்டிருந்தார். தற்போது விவாகரத்து நடைமுறையில் இருக்கும் நிலையில், ஆர்த்தி ரவியின் இந்த பதிவு, சமூக ஊடகங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tamil Cinema News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: