அன்று அஜித் படத்தில் குரூப் டான்ஸர்; இன்று முன்னணி காமெடி கிங்: யார் இந்த ரெடின் கிங்ஸ்லி?

Tamil Cinema Update : 7 வருடங்களுக்கு பிறகு நெல்சனின் முதல் படமான கோலமாவு கோகிலா படத்தின் மூலம் நெல்சன் இயக்குநராகவும், ரெடின கிங்ஸ்லி நடிகராகவும் அறிமுகமானார்.

Tamil Cinema Actor Redin Kingsley Update : தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் ரெடின் கிங்ஸ்லி. நயன்தாரா நடிப்பில், வெளியான கோலமாவு கோகிலா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் இநத படத்தின் இயக்குநர் நெல்சனுடன் நெருங்கிய நன்பரான இவர், பல வருடங்களாக சினிமாவில் அங்கிகாரத்திற்காக போராடி வந்தார். தனது கடுமையான முயற்சியின் காரணமாக சினிமாவில் கால்பதித்த இவர் இயக்குநர் செல்சன் மூலமாக தற்போது பிரபலமடைந்துள்ளார்.

கல்லூரி காலத்தில் இருந்து இயக்குநர் நெல்சனுடன் தொடர்பில் இருந்து ரெடின் கிங்ஸ்லி, நெல்சனின் முதல் படமான வேட்டை மன்னன் படத்திலேயே நடித்துள்ளார். 2010-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த படம் சில தவிர்க்க முடியாத காரணத்தால் அந்த படம் கிடப்பில் போடப்பட்டது. அதன்பின்னர் 7 வருடங்களுக்கு பிறகு நெல்சனின் முதல் படமான கோலமாவு கோகிலா படத்தின் மூலம் நெல்சன் இயக்குநராகவும், ரெடின கிங்ஸ்லி நடிகராகவும் அறிமுகமானார்.

அதன்பிறகு சிவகார்த்திகேயன் நடிபபில் நெல்சன் இயக்கிய டாக்டர் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவற்பை பெற்றது. மேலும் இந்த படத்தில் கிங்ஸ்லி நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரிய ரீச் ஆனது. இந்த படமும் சிவகார்த்திகேயன் கெரியரில் பெரிய வசூல் சாதனை நிகழ்த்தியது. இந்த படத்தில் யோகி பாபுவுக்கே டஃப் கொடுக்கும் அளவுக்கு கிங்ஸ்லி தனது சிற்ந்த நகைச்சுவையை கொடுத்திருபபார். அவர் சீரியசாக பேசும் வசனங்கள் எல்லாமே ரசிகர்களுக்கு சிரிப்பை வரவழைப்பதாக இருக்கும்.  

இந்த படத்தில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார் ரெடின் சிங்ஸ்லி. அதனைத் தொடர்ந்து தற்போது நெல்சன் இயக்கத்தில விஜய் நடிக்கும் பீஸ்ட், சிவா நடிபபில் இடியட், சிம்புவுடன் பத்து தலஈ, சூர்யாவுடன் எற்கும் துணிந்தவன் உள்ளிட்ட படங்களில் காமெடி வேடத்தில் நடித்து வருகிறார். இந்த படங்கள் அனைத்தும் வெளியாகும்போது கிஙஸ்லி முன்னணி காமெடி நடிகராக உயர்ந்துவிடுவார் என்று கூறி வருகினறனர்.

தற்போது பல படங்களில் நடித்து வந்தாலும் கிங்ஸ்லி சினிமாவிற்கு வருவதற்கு முன்பு எக்ஸிபிஷன் ஆர்கனைசராக பணியாறறி வந்துள்ளார். மேலும் ஈவண்ட் மேனேஜ்மெண்ட் செய்துள்ளார். சினிமாவில் காமெடியானாக இருந்தாலும் நிஜத்தில் செம் ஸ்டரிகட்டான ஆபீசர் போல நடந்துகொள்வாராம். மேலும் சிறுவயதில் இருந்தே நடனத்தில் ஆர்வம் கொண்ட கிங்ஸ்லி, அஜித் நடிப்பில் வெளியான அவள் வருவாளா படத்தில் குருப் டான்ரசாக நடனமாடியுள்ளார். தற்போது காமெடி வேடத்தில் நடித்து வரும் இவர். வில்லன் வேடத்தில் நடிக்க வேண்டும்என்று ஆசைப்படுகிறாராம்.

இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் கிங்ஸ்லேவுக்கு பலரும்வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில், இவரது கடந்த கால வாழ்க்கை குறித்து குறிப்புகளை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil cinema actor redin kingsley group dancer in ajith movie

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express