டிவி நடிகை சங்கீதாவை திருமணம் செய்துகொண்ட பிரபல காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லே தனது மனைவியுடன் ஹனிமூன் சென்றுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
1998-ம் ஆண்டு வெளியான அஜித்தின் அவள் வருவாளா என்ற படத்தின் மூலம் டான்சராக அறிமுகமானவர் ரெடின் கிங்ஸ்லே. தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த இவர், அதன்பிறகு எந்த படத்திலும் நடிக்காத நிலையில், இயக்குனர் நெல்சனின் முதல் படமான வேட்டை மன்னன் படத்தில் கமிட் செய்யப்பட்டுள்ளார். ஆனால் அந்த படம் பாதியில் கைவிடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து நெல்சன் 2018-ம் ஆண்டு நயன்தாரா நடிப்பில் இயக்கிய கோலமாகவு கோகிலா என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படம் அவருக்கு நல்ல அறிமுகத்தை கொடுத்த நிலையில், அடுத்து ஆர்,ஜே.பாலாஜி நடித்த எல்கேஜி, யோகிபாபு நடித்த கூர்கா, சந்தானத்தின் ஏ1 உள்ளிட்ட படங்களில் காமெடியில் கலக்கிய ரெடின் கிங்ஸ்லே, சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் இயக்கிய டாக்டர் படத்தில் நடித்திருந்தார்.
தொடர்ந்து பீஸ்ட், காத்து வாக்குல ரெண்டு காதல், நாய் சேகர் ரிட்டன்ஸ், டிடி ரிட்டன்ஸ் என தொடர்ந்து படங்களில் நடித்து வரும் கிங்ஸ்லே கடந்த டிசம்பர் 10-ந் தேதி தனது நீண்டநாள் காதலியான நடிகை சங்கீதாவை திருமணம் செய்துகொண்டார். பெங்களூருவில் இவர்களது திருமணம் எளிமையான முறையில் நடைபெற்ற நிலையில், புதுமன தம்பதி தற்போது மாலத்தீவுக்கு ஹனிமூன் சென்றுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“