/indian-express-tamil/media/media_files/2025/08/07/robo-shankar-2025-08-07-11-43-29.jpg)
தமிழ் சினித்திரையிலும், வெள்ளித்திரையிலும் தனது காமெடியின் மூலம் ரசிகர்களை கவர்ந்த ரோபோ சங்கர், திடீரென மரணமடைந்த நிகழ்வு பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், அவரை பற்றி பலரும் அறியாத தகவல்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
1978-ம் ஆண்டு மதுரையில் பிறந்த ரோபோ சங்கர், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முதுகலை பட்டம் பெற்றவர். சிறுவயதில் இருந்தே மெமிக்ரி செய்வதில் ஆர்வத்துடன் இருந்த அவர், தனது பள்ளி மற்றும் கல்லூரி காலத்தில், பல கிராமங்களில் நடைபெற்ற திருவிழா மேடைகளில் தனது திறமையை வெளிக்காட்டி பலரின் கவனத்தை ஈர்த்தவர். மேடை நிகழ்ச்சிகளில் தனது திறமையை நிரூபித்த அவருக்கு டிவி நிகழ்ச்சிகளில் வாய்ப்பு கிடைத்தது.
விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் சின்னததிரை ரசிகர்களை தனவசப்படுத்திய ரோபோ சங்கர், அதன்பிறகு அது இது எது, உள்ளிடட பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று காமெடியில் கலக்கினார். சில நிகழ்ச்சிகளில் நடுவராகவும் பங்கேற்றிருந்த ரோபோ சங்கர், தனது உடலில் மெட்டாலிக் நிற பெயிண்ட்டை பூசிக் கொண்டு, ரோபோவைப் போலவே, தனது உடலை அசைத்துக் காட்டும் திறமை கொண்டவர். இதன் காரணமாக தான் அவருக்கு ரோபோ சங்கர் என்று பெயர் வந்தது.
விஜய் டிவி நடத்திய நடன நிகழ்ச்சியில் தனது மனைவியுடன் கலந்து கொண்டார். 1997-ம் ஆண்டு விஜயகாந்த் நடிப்பில் வெளியான தர்மசக்கரம் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான ரோபோ சங்கர், அடுத்து படையப்பா படத்தில் டான்சராகவும், ஜூட், ஏய், கற்க கசடற தீபாவளி, மதுரை வீரன், ரௌத்திரம் உள்ளிட்ட பல படங்களில் சிறிய கேரக்டரில் நடித்துள்ளார். இதில் ரௌத்திரம் படத்தில் அவர் நடித்த காட்சிகள் இம்பெறவில்லை. அதன் பின்னர் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
பல படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு பெரிய அடையாளம் கொடுத்த படம், வாயை மூடி பேசவும். இநத படத்தில் போதை ஆசமியாக இவர் நடித்த காட்சிகள் பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. அதேபோல் மாரி படத்தில் இவர் நடித்த சனிக்கிழமை கேரகரும் பெரிய கவனம் பெற்றது. அதன் பின்னர் அவருக்கு சினிமாவில் அடுத்தடுத்து பட வாய்ப்புகளைப் பெற்றுக் கொடுத்தது. கடைசியாக இவர் நடிப்பில் சொட்ட சொட்ட நனையுது என்ற படம் வெளியானது.
ரோபோ சங்கர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டிருபபது தெரியவந்து அதற்காக சிகிச்சை எடுத்துக்கொண்டார். அப்போது அவர் உடல் எடை குறைந்து மெலிந்த தேகத்துடன் இருந்துது அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. ஆனாலும் அதில் இருந்து மீண்டு வந்த ரோபோ சங்கர், அடுத்து சில மாதங்களில் தனது உடலை தயார்படுத்தி மதுரையில் நடைபெற்ற ஆணழகன் போட்டியில் பங்கேற்று மிஸ்டர் மதுரை பட்டம் வென்றிருந்தார், உடல்நல குறைவுக்க பின் தனது மகளுக்காக வாழ நினைத்த ரோபோ சங்கர் உடனடியாக அவருக்கு திருமணம் செய்து வைத்தார்,
விஜய் நடித்த பிகில் படத்தின் மூலம் அறிமுகமான இந்திரஜா சங்கர், தனது உறவினர் கார்ததி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவருக்கு ஒரு ஆண் குந்தை உள்ளது. மனைவியும் மகளும் தான் உலகம் என்று வாழ்ந்து வந்த ரோபோ சங்கர் தனத வாழ்நாளின் இறுதியில் தனது பேரனுடன் அதிகமாக புகைப்படங்கள் எடுத்துக்கொண்டுள்ளார். கமலஹாசனின் தீவிர ரசிகரான ரோபோ சங்கர், தனது பேரனுக்கு அவர் தான் பெயர் சூட்ட வேண்டும் என்று விரும்பி கேட்டுள்ளார், அதேபோல் நடந்தது, பலரையும் தனது நகைச்சுவையால மகிழ வைத்த ரோபோ சங்கர் இன்ற இல்லாமல் போய்விட்டார் என்ற தகவல் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.