/indian-express-tamil/media/media_files/2025/09/27/virumandi-deena-2025-09-27-17-05-32.jpg)
ரூ300 சம்பளம் பெற்றுக்கொண்டு ஜிம் பாயாக இருந்த என்னை அதிக சம்பளம் கொடுத்து தனி கேரியர் வைத்து சாப்பாடு கொடுத்தவர் கமல்ஹாசன். எனது ஆசான் அவர் தான் என்று நடிகர் சாய் தீனா உருக்கமாக பேசியுள்ளார்.
ரயில்வேதுறையில் வேலை பார்த்து வந்த சாய் தீனா, அதன்பிறகு, திரைப்படங்களில் உதவியாளராக பணியாற்றியுள்ளார். அப்போது தான் நடிகர் கமல்ஹாசன், தான் இயக்கி தயாரித்து ஹீரோவாக நடித்த விருமாண்டி திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்க வைத்துள்ளார். ஜெயிலில் வார்டனாக தீனா நடித்த இந்த கேரக்டர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
இந்த படத்திற்கு பிறகு, புதுப்பேட்டை, தலைநகரம், எந்திரன், ராஜா ராணி, கொம்பன், தெறி, மெர்சல் என முன்னணி நடிகர்களில் படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்த தீனா, விஜய் நடிப்பில் தெறி, மெர்சல், பிகில், மாஸ்டர் என வெற்றிப்படங்களில் நடித்துள்ள தீனா, சில படங்களில் காமெடி வில்லனாகவும் நடித்துள்ளார். அதேபோல் வட சென்னை படத்தில் முக்கிய வில்லன் கேரக்டரில் நடித்து அசத்திய சாய் தீனா, தற்போது திரையரங்குகளில் வெளியாகியுள்ள படையாண்ட மாவீரா என்ற படத்தில் நடித்துள்ளார்.
தெலுங்கில் சில படங்கள், இந்தியில் ஜவான் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள தீனா, தனது திரையுலக அனுபவம் குறித்து பேசியுள்ளார். அதில், சினிமாவுக்கு என் முதல் ஆசான், கமல் சார் தான். அவர் தான் சினிமா என்றால் என்ன? நடிப்பு எப்படி இருக்க வேண்டும் என்று எனக்கு சொல்லிக்கொடுத்தவர். அந்த படத்தில் 3 மாதங்கள் நடித்தேன். இதில் 20-30 நாட்கள் கமல்சாருடன் தான் நடித்திருந்தேன். சாதாரண ஒரு ஜூனியர் நடிகர் ஜிம்பாய் என்று இல்லாமல், அவன் ஒரு ஆர்டிஸ்ட் என்ற மரியதை கொடுத்தவர்.
ஜூனியர் ஆர்டிஸ்ட் அனைவரும் லைனில் நின்று சாப்பிடுவார்கள். ஆனால் நான் நடிகன் ஆகிவிட்டேன் என்று சொன்ன கமல் சார் எனக்கு தனியாக கேரியர் கொடுக்க சொன்னார், தினமும் என் தோலில் கைபோட்டு பேசிக்கொண்டே இருக்கார். எனது அங்கிள் கமல் சாரின் நெருங்கிய நண்பர் அவரை பற்றியும், ஸ்டண்ட் பற்றியும் நிறைய பேசுவார். அங்கிருந்து தான் எனக்கு ஒரு ஸ்பார்க் ஸ்டார்ட் ஆச்சு. வேலைக்கு போகிறோம் 200-300 கிடைக்குது சாப்பிடுகிறோம் என்று இருந்தேன்.
என்னோட ஆசான் #கமல் சார், ஜிம் பாய்யா 300 ரூபாய் வாங்கி கொண்டு இருந்த எனக்கு #விருமாண்டி'ல அறிமுகபடுத்தி தினமும் 2000 ரூபாய் சம்பளம் கொடுத்தது கமல் சார், லைன்ல நின்னு சாப்பிட்ட எனக்கு கமல் சார் சொல்லி வாழ்க்கையில் உக்கார வைத்து சாப்பாடு போட்டாங்க - @actor_saideena👏#KamalHaasanpic.twitter.com/KUX9bi8auu
— SundaR KamaL (@Kamaladdict7) September 27, 2025
முதல்முறையாக ஒரு நாளைக்கு ரூ2000 சம்பளம் கொடுத்து நடிப்பு என்றால் என்ன என்று சொல்லிக்கொடுத்து, நீ நடிக்க வா என்று அழைத்தவர் கமல் சார் தான். வேலையும் கொடுத்து அதற்கான பயிற்சியும் கொடுத்தவர் என்று தீனா கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.