ரஜினிகாந்த் படத்தில் வில்லனாக நடித்த நடிகர் ஒருவர் அடுத்து பட வாய்பு இல்லாத நிலையில், சில மாதங்கள் இடைவெளிக்கு பிறகு விஜயகாந்த் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால் இந்த படத்தில் நடிக்க அவர் நடிகர் ரஜினிகாந்திடம் சம்மதம் கேட்டு வந்தாக ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
Advertisment
தமிழ் சினிமாவில் நடிகர் தயாரிப்பாளராக இருக்கும் ரஜினிகாந்த, நடிகராக பல வெற்றிப்படங்களை கொடுத்திருந்தாலும் ஒரு சில படங்களை மட்டுமே தயாரித்துள்ளார். அந்த வகையில் ரஜினிகாந்த் கதை, திரைக்கதை எழுதி தயாரித்த படம் தான் வள்ளி. 1993-ம் ஆண்டு வெளியான இந்த படத்தை இயக்குனர் கே.நடராஜ் இயக்கியிருந்தார். பிரியா ராமன், சஞ்சய் பார்கவ், வடிவேலு ஆகியோருடன், ரஜினிகாந்த் வீரய்யன் என்ற கேரக்டரில் முழுநீள கேமியோ கேரக்டரில் நடித்திருப்பார்.
பிரியா ராமன், சஞ்சய் பார்கவ் இருவருக்குமே இதுதான் முதல் படம். வள்ளி கேரக்டரில் பிரியாராமன் நடிக்க, சேகர் என்ற கேரக்டரில் சஞ்சய் பார்கவ் நடிததிருந்தார். வள்ளி – சேகரும் காதலிப்பார்கள். ஆனால் சேகர் வள்ளியை பலாத்காரம் செய்துவிட்டு, தனது ஊருக்கு தப்பி சென்றுவிடுவார். அதன்பிறகு வள்ளி என்ன முடிவு செய்தாள் என்பது தான் இந்த படத்தின் கதை. இளையராஜா இசையமைத்த இந்த படத்தில் பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
இந்த படத்தில் வள்ளியை பலாத்காரம் செய்யும் சேகர் என்ற கேரக்டரில் நடித்த பிரபல சீரியல் நடிகை காயத்ரி சாஸ்திரியின் அண்ணன். இந்த படத்தில் அவரின் நடிப்பு பலரின் பாராட்டுக்களை பெற்றிருந்தாலும், அதன்பிறகு தமிழில் இவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதே சமயம் வள்ளி படத்தை தெலுங்கில் ரிலீஸ் செய்யும்போது, சஞ்சய் பார்கவ் போட்டோவை போஸ்டரில் பெரிதாக போட்டு விளம்பரம் செய்தால், அவருக்கு ஆந்திராவில் பெரிய மார்க்கெட் உருவானது.
Advertisment
Advertisements
வள்ளி படத்தின் தெலுங்கு டப்பிங் போஸ்டரில், ரஜினிகாந்த் போட்டோ சிறிதாக போட்டு விளம்பரம் செய்யப்பட்டுள்ளது, தமிழில் வள்ளி சுமாரான படமாக அமைந்திருந்தாலும், தெலுங்கில் அந்த படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்துள்ளனர். அதன்பிறகு தெலுங்கில் பிஸியான நடிகராக வலம் வந்த சஞ்சய் பார்கவ்க்கு தமிழில் விஜயகாந்த் பட வாய்ப்பு கிடைத்துள்ளது, 1994-ம் ஆண்டு ஏ.வி.எம்.நிறுவனம் தயாரிப்பில், பி.வாசு இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த படம் சேதுபதி ஐ.பி.எஸ். பெரிய வெற்றிப்படமாக அமைந்த இந்த படத்தில் தீவிரவாதிகளுடன் இருக்கும் ஒரு நல்லவன் கேரக்டரில் சஞ்சய் பார்கவ் நடிததிருந்தார்.
இந்த படத்தின் கதையை கேட்டவுடன், சின்ன கேரக்டராக இருக்கிறதே பண்ணலாமா வேண்டாமா என்ற முடிவுடன் சஞ்சய் ரஜினிகாந்தை சந்தித்து பேசியுள்ளார். அப்போது ரஜினிகாந்த் இதுபோன்ற வாய்ப்பு வந்தால் ஏற்றுக்கொள். ஏ.வி.எம்.படம் பி.வாசு இயக்கம், இந்த வாய்ப்பு கிடைக்காது பயன்படுத்திக்கொள் என்று கூறியுள்ளார். அதன்பிறகு இந்த படத்தில் நடித்த சஞ்சய் பார்கவ்க்கு “நட சாத்து நட சாத்து” என்ற பாடலில் மீனாவுடன் நடனமாடும் வாய்ப்பும் கிடைத்தது என்று ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.