சினிமாவின் தொடக்க காலத்தில் புராணம் மற்றும் பக்தி படங்கள் அதிகம் வந்துகொண்டு இருந்தது. ஆனால் காலங்கள் செல்ல செல்ல சமகால சம்பவங்களையும் நிகழ்வுகளையும் அடிப்படையாக வைத்து திரைப்படங்களை எடுக்க தொடங்கினார்கள். அந்த சமயத்தில் கூட, பக்தி படங்களும், புராண படங்களும் அவ்வப்போது வந்துகொண்டு இருந்தது. ஆனால் இந்த டிஜிட்டல் காலக்கட்டத்தில் பக்தி படங்களுக்கு பதிலாக பேய் படங்கள் அதிகம் வர தொடங்கியுள்ளது.
சுந்தர்.சி, லாரண்ஸ் போன்ற இயக்குனர்கள் பேய் படங்களை இயக்குவரை ஒரு ப்ரான்செய்ஸாகவே வைத்துள்ளனர். தற்போது லாரண்ஸ் தனது காஞ்சனா சீரிஸின் அடுத்த படத்தை இயக்கி வரும் நிலையில், சுந்தர்.சி. அரண்மனை 4 படத்தை முடித்தவிட்டு, நயன்தாரா நடிப்பில் மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தை இயக்கி வருகிறார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இவர்கள் இருவரையும் தவித்து 3-வது ஒருவர் இருக்கிறார். அவர் தான் சந்தானம்.
தமிழ் சினிமாவில் காமெடியனாக அறிமுகமாகி, அதன்பிறகு முன்னணி காமெடி நடிகராக உயர்ந்த சந்தானம், ஒரு கட்டத்தில் ஹீரோக்களின் நண்பன் என்ற கேரக்டரில் 2-வது நாயகனாக உருவெடுத்தார். அதன்பிறகு வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக உயர்ந்த அவருக்கு, தில்லுக்கு துட்டு என்ற பேய் படம் தான் ஹீரோவாக பெரிய வெற்றியை கொடுத்தது. அதன்பிறகு ஒரு சில காதல் படங்களில் நடித்திருந்தாலும் தில்லுக்கு துட்டு வெற்றியை சந்தானத்தால் முந்த முடியவில்லை.
இதன் காரணமாக மீண்டும் பேய் படங்களில் நடிக்க தொடங்கினார். சுந்தர்.சி பழிவாங்கும் பேய், லாரண்ஸ் உதவி செய்யும் பேய் என்றால், சந்தானம் காமெடி பேய். தில்லுக்கு துட்டு படத்திற்கு பிறகு, அந்த படத்தின் 2-ம் பாகமாக தில்லுக்கு துட்டு 2, 3-வது பாகமாக டிடி ரிட்டன்ஸ் சமீபத்தில் வெளியான 4-வது பாகம், டெவில்ஸ் டபுள்ஸ் படங்கள் வெளியாகியுள்ளது. இதில் முதல் பாகத்தை போல் 3-வது பாகமாக டிடி ரிட்டன்ஸ் பெரிய வெற்றியை கொடுத்தது.
இதனிடையே, சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய சந்தானம், நாங்கள் மூவரும் பேய்களை பிரித்துக்கொண்டோம். உதவி கேட்கும் பேய் என்றால் நேராக லாரண்ஸ் மாஸ்டரிடம் அனுப்பிவிடுவோம். அதேபோல், ரொம்ப எமோஷ்னல் பயங்கராமாக அழ வேண்டும் என்றால் அந்த பேய் சுந்தர்.சி சாருக்கு அனுப்பி வைத்துவிடுவோம். ஜாலியாக கலாய்ச்சி காமெடி பண்ற பேய் என்றால் மட்டும் நாங்கள் கூப்பிட்டுக்கொள்வோம் என்று கலகலப்பாக கூறியுள்ளார்.