விஜய் டிவி சீரியலில் என்ட்ரி ஆகும் பிரபல நடிகர்... தொடரும் சின்னத்திரை படலம்

Tamil Serial Update : சந்தோஷ் பிரதாப் தாயம், பயமாக இருக்கும் மிஸ்டர் சந்திரமௌலி தேவ் ஓ மை கடவுளே உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.

Tamil Serial Update : சந்தோஷ் பிரதாப் தாயம், பயமாக இருக்கும் மிஸ்டர் சந்திரமௌலி தேவ் ஓ மை கடவுளே உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
விஜய் டிவி சீரியலில் என்ட்ரி ஆகும் பிரபல நடிகர்... தொடரும் சின்னத்திரை படலம்

Tamil Actor santhosh Prathap Entry OTT Serial : பார்த்தீபன் இயக்கிய கதை திரைக்கதை வசனம் இயக்கம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் சந்தோஷ் பிரதாப். தொடர்ந்து தாயம், பயமாக இருக்கும் மிஸ்டர் சந்திரமௌலி தேவ் ஓ மை கடவுளே உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். கடந்த ஆண்டு வெளியான சார்பட்டா பரம்பரை என்ற படத்தில் ராமன் என்ற கேரக்டரில் நடித்திருந்தார்.

Advertisment

இந்த படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான சந்தோஷ் பிரதாப், தற்போது கதிர். பிசாசு 2 மீண்டும் வா அருகில் வா உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். படங்கள் மட்டுமல்லாது டிவி ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று வரும் இவர். குக் வித் கோமாளி சீசன் 3-ல் குக்காக பங்கேற்றுள்ளார்.

அதேபோல், போலீஸ் டைரி 2.0, குருதி களம். ஆனந்தம் ஆரம்பம் உள்ளிட்ட வெப் தொடர்களில் நடித்துள் சந்தோஷ் பிரதாப் தற்போது சீரியலில் அறிமுகமாக உள்ளார். விஜய் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்று கனா காணும் காலங்கள். 90- கிட்ஸ்கள் மத்தியில் முக்கிய இடம்பெற்றுள்ள இந்த சீரியலின் சீசன் 2 தற்போது டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகிறது.

இதில் ராக்ஸ்டார் அசோக் என்ற கேரக்ரில் நடிகர் சந்தோஷ் பிரதாப் நடிக்க உள்ளார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு சினிமாவில் இருந்து வந்த சந்தோஷ் தற்போது முழுநேர டிவி ஆர்டிஸ்டாக மாறிவிட்டார் என்று ரசிகர்கள் கூறி வந்த நிலையில், தற்போது சீரியலில் நடித்து வருவது அவரது ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment
Advertisements

சார்பட்டா பரம்பரை படத்திற்கு பிறகு சந்தோஷ் பிரதாப்-க்கு சினிமாவில் வாய்ப்பு அதிகரிக்கும் என்று கூறப்பட்டு வந்த நிலையில். தற்போது அவர் தொடர்ச்சியாக சின்னத்திரையில் என்ட்ரியாக விருவது சினிமாவில் இவருக்கு போதுமான வாய்ப்பு வரவில்லையே என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietami

Tamil Cinema Tv Serial

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: