/indian-express-tamil/media/media_files/2025/07/23/saranya-ponvannan-2025-07-23-18-07-06.jpg)
தமிழ் சினிமாவின் முன்னணி அம்மா நடிகையாக இருக்கும் சரண்யா பொன்வண்ணன், கமல்ஹாசனுடன் நடிக்கும்போது உண்மையாக அழ வேண்டும் என்பதால், இவர் அழும்வரை படக்குழுவினர் வெயிட் செய்து படப்பிடிப்பு நடத்தியதாக கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் 1987-ம் ஆண்டு வெளியான நாயகன் படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர் தான் சரண்யா பொன்வண்ணன். அதன்பிறகு பிரபுவுடன் மனசுக்குள் மத்தாப்பு, கார்த்திக்குடன் என் ஜீவன் பாடுது, உள்ளிட்ட சில படங்களில் நாயகியாக நடித்துள்ளார், ஆனால் நாயகன் தவிர மற்ற படங்கள் இவருக்கு நாயகியாக கை கொடுக்காத நிலையில், அடுத்து கேரக்டர் நடிகையாக தன்னை நிலை நிறுத்திக்கொண்டார்.
தமிழ் சினிமாவில், தனுஷ் உள்ளிட்ட பல்வேறு நடிகர்களுக்கு அம்மா கேரக்டரில் நடித்து அசத்தியுள்ள சரண்யா, எம்.மகன், தவமாய் தவமிருந்து உள்ளிட்ட படங்களுக்காக ஃபிலிம்ஃபேர் விருதுகளை வென்றுள்ளார். தென்மேற்கு பருவக்காற்று படத்திற்காக, தேசிய விருது வென்றிருந்த சரண்யா, அஜித்தின் கிரீடம், தனுஷின் வேலையில்லா பட்டதாரி, கொடி, சூர்யாவின் 24, நயன்தாராவுடன் கோலமாகவு கோகிலா, உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் அம்மா கேரக்டரில் அசத்தியுள்ளார்.
அதேபோல் அமீர் இயக்கத்தில், வெளியான ராம் படத்தில், ஜீவாவின் அம்மா கேரக்டரில் சரண்யா சிறப்பாக நடித்திருந்தார். இந்த படத்தின் படப்பிடிப்பில் நடந்த சுவராஸயமாக அனுபவங்களை பற்றி பேசியுள்ள சரண்யா, இந்த படம் அமீர் சாருடன் ஒரு நல்ல அனுபவம் கிடைத்தது, எந்த ஒரு காட்சியாக இருந்தாலும், எவ்வளவு நேரம் ஆனாலும் அதனை உள்வாங்கி படமாக்குவார். இதை பார்க்கும்போது எனக்கு நாயகன் படம் தான் நினைவுக்கு வந்தது. இதேபோல் ஒரு சம்பவம் அதில் நடந்தது.
கோவிலில் கமல்ஹாசன் எனக்கு தாலி கட்டுவார். அப்போது நான் அழ வேண்டும். ஆனால் எனக்கு அழுகை வரவில்லை.உண்மையாக நீ அழ வேண்டும் என்று இயக்குனர் மணி ரத்னம் சார் சொன்னார். அதை கேட்டு எனக்கு சிரிப்பு தான் வந்தது. அதை நினைத்து நினைத்து சிரிச்சுக்கிட்டே இருந்தேன். எல்லோரும் உட்கார்ந்து வெயிட் பண்றாங்க, அப்போது மணிரத்னம், நீ அழுவுற வைக்கும் நாங்க வெயிட் பண்ணுவோம் என்று சொன்னார். நான் சும்மா சொல்கிறார் கிண்டல் பண்ணுகிறார் என்று நினைத்தேன். ஆனால் கடைசியில் அப்படித்தான் நடந்தது.
எல்லோரும் நான் எப்போ அழுவேன் என்று வெயிட் பண்றாங்க, ஆனா எனக்கு அழுகை வராதே, உடனே எங்க அப்பா நீ அழுதுதான் ஆகணும் என்று சொன்னார். இதேபோல ஒரு காட்சி தான் ராம் படத்தில் நடந்தது. நீங்கள் அழும்போது நான் எழுத்துக்கொள்கிறேன் என்று அமீர் சொன்னார், நாயகன் படத்தில் சொன்னபோது சிரிப்பு வந்தது. ஆனால் அதில்சந்தித்த அனுபவம் ராம் படத்தில் என்னால் இதை பண்ண முடிந்தது என்று சரண்யா கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.