scorecardresearch

எனக்கு சாப்பாடு போட்டவர் கேப்டன்; வடிவேலு கூப்பிட்டா போகவே மாட்டேன்: ‘சாரப் பாம்பு’ சுப்புராஜ்

இனிமேல் வடிவேலு கூப்பிட்டாலும் அவருடன் நடிக்க மாட்டேன். ஆனால் நான் வேறு படங்களில் நடித்து புகழ்பெற்றாலும் அந்த புகழ் அவருக்குதான் சேரும்.

Sarapap
சாரப்பாம்பு சுப்புராஜ்

வடிவேலு கூப்பட்டால் கூட இனி நடிக்க போகமாட்டேன் ஆனால் நான் இனி எத்தனை படங்களில் நடித்தாலும் இந்த புகழ் அவருக்குதான் போய் சேரும் என்று சாரப்பாம்பு சுப்புராஜ் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக இருந்த வடிவேலுவின் காமெடி குழுவில் ஒரு நடிகராக இருந்தவர் சுப்புராஜ். மருதமலை படத்தில் சாரப்பாம்பு என்று அவர் தனது பெயரை சொல்லும் காட்சி பெரும் வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து சாரப்பாம்பு சுப்புராஜ் என்று அழைக்கப்படும் அவர் தற்போது நேர்காணல் ஒன்றில் பேசியுள்ளார்.

இதில் தனது சினிமா வாய்ப்பு சினிமாவில் தான் சந்தித்த அனுபவங்கள் உள்ளிட்ட பலவற்றை பகிர்ந்துள்ளார். ராசாவின் மனசிலே படத்தில் நான் இணை இயக்குனராக இருந்தபோது வடிவேலு அந்த படத்தில் அறிமுகம். அப்போது பழக்கம் ஏற்பட்டது. அதன்பிறகு எனது நண்பன் தனியாக படம் இயக்க சென்றபோது அவன் என்னை அவனுடன் வைத்துக்கொண்டன். ஆனால் அந்த படம் இறுதிக்கட்டத்தில் இருக்கும்போதே அவன் இறந்துவிட்டான்.

இதனால் மீண்டும் நான் வீழ்ச்சிக்கு சென்றேன். அப்போது ஒரு படத்திற்கு காமேடி ட்ராக் எழுத்த கூப்பிட்டபோது தான் மீண்டும் வடிவேலுவை சந்தித்தேன். அந்த படத்தில் அவருடன் இணைந்து நடித்தேன். அதன்பிறகு நீ என்னுடனே இருந்தவிடு என்று வடிவேலு சொன்னார். அதன்பிறகு அவருடன் பல படங்களில் நடித்திருந்தேன். அப்போது சாரப்பாம்பு என்று அழைப்பதற்கு காரணம் அவர்தான்.

ஆனால் இனிமேல் வடிவேலு கூப்பிட்டாலும் அவருடன் நடிக்க மாட்டேன். ஆனால் நான் வேறு படங்களில் நடித்து புகழ்பெற்றாலும் அந்த புகழ் அவருக்குதான் சேரும். எனக்கு சாப்பாடு போட்டு வளர்த்துவிட்டவர் விஜயகாந்த். அவர் தர்மம் செய்தவர். எத்தனையோ இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் என பலரையும் வளர்த்துவிட்டர் விஜயகாந்த். அவரை தவறாக பேசக்கூடிய தகுதி யாருக்கும் இல்லை.

அனைத்து நடிகர் நடிகைகளும் கேப்டன் மாதிரி யாரும்’ இல்லை என்று சொல்வார்கள். இறைவனைவிட தாண்டி விஜயகாந்த் மீது மரியாதை வைத்துள்ளேன். அவரை பற்றி தவறாக பேசியதால் வடிவேலுவுடன் நடிக்க எனக்கு விருப்பம் இல்லை என்று கூறியுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil cinema actor sarapambu subburaj said vadivelu vijayakanth clash

Best of Express