கோவில் கட்டியாச்சி, அடுத்து போலீஸ் ஸ்டேஷன், கோர்ட், ரயில்வே... சொந்த ஊரில் ஸ்டூடியோ அமைக்கும் சரவணன்!

முதலில் வீர முனியப்பன் சிலை வைத்தேன். அங்கு நான் சென்றால் எனக்கு அமைதி கிடைக்கும். அங்கேயே படுத்திருப்பேன். அதன்பிறகு இப்போது விநாயகர் கோவில் கட்டி இருக்கிறேன்.

முதலில் வீர முனியப்பன் சிலை வைத்தேன். அங்கு நான் சென்றால் எனக்கு அமைதி கிடைக்கும். அங்கேயே படுத்திருப்பேன். அதன்பிறகு இப்போது விநாயகர் கோவில் கட்டி இருக்கிறேன்.

author-image
WebDesk
New Update
Saravanan Actor

தமிழ் சினிமாவில், 90-களில் பல வெற்றிப்படங்களை கொடுத்த நடிகர் சரவணன், தற்போது கேரக்டர் நடிகராக வலம் வரும் நிலையில், தற்போது அவர் சொந்த ஊரில் ஒரு கோவில் கட்டியுள்ளார். அங்கேயே ஒரு சினிமா ஷூட்டிங் எடுப்பதற்கான ஸ்டூடியோவை அமைக்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.

Advertisment

தமிழ் சினிமாவில், 1991-ம் ஆண்டு வெளியான வைதேகி வந்தாச்சு என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் சரவணன். தொடர்ந்து, பொண்டாட்டி ராஜ்ஜியம், அபிராமி, பார்வதி என்னை பாரடி, விஸ்வநாத், சந்தோஷம் என பல வெற்றிப்படங்களில் நடித்திருந்தார். 2003-ம் ஆண்டு தாயுமாணவன் என்ற படத்தை இயக்கிய நடித்த சரவணவன், அதன்பிறகு திரைப்படங்களில் நடிக்காமல் விலகியிருந்தார்.

தொடர்ந்து 2007-ம் ஆண்டு அமீர் இயக்கத்தில் வெளியான பருத்தி வீரன் படத்தின் மூலம் ரீ-என்டரி கொடுத்தார், இந்த படத்தில் அவர் நடித்த சித்தப்பு கேரக்டர் இன்றுவரை அவரின் அடையாளமாக மாறிவிட்டது. தற்போது சித்தப்பு சரவணன் என்றால் தான் பலருக்கும் தெரியும் அளவுக்கு அந்த கேரக்டர் அவரை உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது. அதன்பிறகு வில்லன், குணச்சித்திரம் என பலதரப்பட்ட கேரக்டர்களில் நடித்து வருகிறார்.

இதனிடையே, சமீபத்திய தனது சொந்த ஊரான சேலத்தீல் புதிதாக கோவில் கட்டியுள்ள, நடிகர் சரவணன், இது குறித்து பிகைண்ட்வுட்ஸ் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். இந்த இடத்தில் ரொம்ப நாளாக ஒரு கோவில் கட்ட வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அதற்காக முதலில் வீர முனியப்பன் சிலை வைத்தேன். அங்கு நான் சென்றால் எனக்கு அமைதி கிடைக்கும். அங்கேயே படுத்திருப்பேன். அதன்பிறகு இப்போது விநாயகர் கோவில் கட்டி இருக்கிறேன்.

Advertisment
Advertisements

இந்த இடம் எனக்கு ரொம்ப பிடித்த இடம். இங்கு வந்தால் நான் மிகவும் அமைதியாக இருப்பேன். வீர முனியப்பன் என்னை பாதுக்கிறார் என்று நினைத்துக்கொள்வேன். இந்த இடத்தில் காம்பவுண்ட் சுவற்றை சுற்றி, நிறைய மரங்கள் வைத்திருக்கிறேன். விவசாயம் செய்தேன். நிலக்கடலை கூட பயிர் செய்தோம். ஆனால் அதில் எனக்கு உடன்பாடு இல்ல. இப்படித்தான் பண்ணப்போகிறேன் என்று சொன்னேன். வீட்டில் முதலில் எதிர்த்தார்கள் அதன்பிறகு ஒப்புக்கொண்டார்கள்.

சினிமாவில் ஒரு கிராமத்து படம் 40 நாட்கள் எடுக்க வேண்டும் என்றால், இங்கு வந்துவிடலாம். கோவில் இருக்கிறது. அழகான கிராமம் இருக்கிறது. கிராமத்தின் வீடுகள் இருக்கிறது, விவசாய நிலங்கள், தென்னை மர தோப்பு மற்றும் வாழைமர தோப்புகள் இருக்கிறது, மஞ்சள், கரும்பு சுற்றிலும் விளைந்து கிடக்கிறது. மலையடிவாரம், பூந்தோட்டம், காடு இருக்கிறது, இங்கு இருக்கும் மண்டபத்தில் 100 பேரை தங்க வைக்கும் அளவுக்கு இடம் இருக்கிறது.

அரண்மனை படத்திற்காக ஷூட்டிங் நடைபெற்றபோது அரண்மனை தேடி அலைந்தோம். ஐதராபாத்தில் இருந்து 46 கி.மீ தொலைவில் நடிகர் மோகன்பாபுவின் பங்களாவில் தான் அந்த ஷூட்டிங் நடைபெற்றது. ஆனால் நான் இங்கு ஒரு அரண்மனை செட் போட்டால், சேலம் வந்து ஏற்காடு ஷூட்டிங் முடித்து, இங்கு ஒரு செட்டப்பில் சில காட்சிகள் எடுத்துவிட்டு, இங்கு வேற என்ன வேண்டுமானாலும் பண்ணலாம். போலீஸ் ஸ்டேஷன், கோர்ட் செட்டப் இங்கு போடப்போகிறேன்.

இங்கிருக்கும் ஸ்டூடியோவில் கோர்ட், போலீஸ் ஸ்டேஷன், தண்ணீருக்குள் மூழ்கியவர்களை காட்டுவதற்காக அண்டர் வாட்டர் செட்டப், தமிழ்நாட்டில் எங்கும் இல்ல. இங்கு இருக்கிறது. நீச்சல் குளம், ரயில்வே ஸ்டேஷன் செட்டப், விமான செட்டப் என அனைத்தும் இங்கு பண்ண போகிறேன். இந்த மாதிரி பல ஐடியாக்கள் இருக்கிறது. கடவுள் பார்த்துக்கொள்வார் என்று கூறியுள்ளார்.  

Tamil Cinema News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: