Advertisment

கண்ணப்பன் கவர்ந்தாரா? கவிழ்ந்தாரா? கான்ஜூரிங் கண்ணப்பன் விமர்சனம்

நாய் சேகர் படத்திற்கு பிறகு நடிகர் சதீஷ் நாயகனாக நடித்துள்ள கான்ஜூரிங் கண்ணப்பன் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது.

author-image
WebDesk
New Update
Kannappan.

கான்ஜூரிங் கண்ணப்பன்

சதீஷ், ரெஜினா, சரண்யா பொன்வண்ணன், ஆனந்த்ராஜ் ஆகியோர் நடிப்பில் வெளிவந்திருக்கும் "கான்ஜுரிங் கண்ணப்பன்"  படத்தின் விமர்சனம்

Advertisment

கதைக்களம் :

கேமிங் துறையில் வேலை தேடிக் கொண்டிருக்கும் நாயகன் சதீஷ் ஒரு நாள் தெரியாமல் சூனியம் வைத்திருக்கும் Dream catcher-ல் இருந்து ரெக்கை ஒன்றை எடுத்துவிடுகிறார். இதன் விளைவாக அவருக்கு கனவு வரும்போது எல்லாம் ஒரு பேய் பங்களாவில் மாட்டிக் கொள்கிறார். அவர் மட்டும் இல்லாமல் ஆனந்தராஜ், ரெடின்,  சரண்யா உள்ளிட்டோரும் ரெக்கையை பிடித்து இந்த கனவு உலகத்தில் மாட்டிக் கொள்ள, அதன் பிறகு பேயிடமிருந்து எப்படி இவர்கள் மீண்டு வந்தார்கள்? என்பதே மீதி கதை.

நடிகர்களின் நடிப்பு :

நாய் சேகர் படத்திற்கு பிறகு சதீஷ் நாயகனாக நடித்திருக்கும் படம். தன்னுடைய வழக்கமான காமெடி ஜார்னர் படம் என்பதால் அசால்ட்டாக ஸ்கோர் செய்து சிரிக்க வைக்கிறார். காமெடி மட்டுமில்லாமல் திகில் அனுபவங்களிலும் அவருடைய நடிப்பு பிரமாதம்.சரண்யா பொன்வண்ணன் மற்றும் ஆனந்த்ராஜ் நடிப்பு படத்திற்கு பெரிய பலம். சில இடங்களில் ரெடின் கிங்ஸ்லியின் காமெடிகள் ஒர்க் ஆகி இருக்கிறது. விடிவி கணேஷ், நமோ நாராயணன், நாசர் மற்றும் ரெஜினாவின் கதாபாத்திரங்களை ஓரளவிற்கு ரசிக்கலாம். பேயாக நடித்த நடிகை Elli Avrram நடிப்பு சுமார்.

இயக்கம் மற்றும் இசை :

பேய் படத்தில் பெரிதாக என்ன செய்து விட முடியும் என்ற நம் மனநிலையை உடைத்து சற்று வித்தியாசமான திகில் படத்தை கொடுத்திருக்கும் இயக்குநருக்கு பாராட்டுக்கள். யுவன் சங்கர் ராஜா பல இடங்களில் தன் இசையின் மூலம் நம்மை பயமுறுத்துகிறார்.

படம் எப்படி ?

வழக்கமான பேய் படமாக இப்படம் தொடங்கினாலும் போகப் போக ஒரு வித்தியாசமான பேய் களத்திற்கு நம்மை அழைத்து செல்கிறார் இயக்குநர். முதல் பாதி முழுவதும் நேரம் போவதே தெரியாமல் கலகலப்பாக செல்கிறது. குறிப்பாக ஆனந்த்ராஜ், ரெடின் ஆகியோரின் காமெடி பஞ்சஸ் பல இடங்களில் நம்மை குதுகளிக்க வைக்கிறது. இரண்டாம் பாதியும் ஓரளவிற்கு நம்மை திருப்தி படுத்துகிறது. ஆனால் இரண்டாம் பாதியில் காமெடி காட்சிகளை குறைத்து திகில் காட்சிகளை நிறைய வைத்து நம்மை ஓரளவுக்கு திகிலூட்டி இருக்கிறார்கள். பேய் படங்களில் லாஜிக் எல்லாம் பார்க்க கூடாது என்று நினைப்பவர்களுக்கு இப்படம் ஒரு நல்ல பொழுதுபோக்காக அமையும்.

லாஜிக் மீறல்கள், இரண்டாம் பாதியின் சற்று தொய்வான காட்சிகள், சில இடங்களில் காமெடிகள் கை கொடுக்கவில்லை என்பது போன்ற சிறிய ஏமாற்றங்கள்  இருந்தாலும், ஒரு நல்ல பொழுதுபோக்கான திரைப்படத்தை பார்த்த அனுபவத்தை மட்டுமே படத்தின் முடிவில் நமக்கு தருகிறான் இந்த "கான்ஜுரிங் கண்ணப்பன்"

நவீன் சரவணன்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment