Advertisment

பிரதமர் மோடி பயோபிக் படம் : சத்யராஜ் நடிக்கிறாரா? உண்மை நிலவரம்!

பிரதமர் மோடியின் பயோபிக் திரைப்படத்தில் சத்யராஜ் நடிக்க உள்ளதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

author-image
WebDesk
New Update
Sathyraja.jpg

பிரதமர் மோடி - சத்யராஜ்

இந்திய சினிமாவில் சமீப காலமாக பிரபலங்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்ட திரைப்படங்கள் அதிகம் வெளியாகி வருகிறது. இந்த திரைப்படங்களின் வரிசையில் தற்போது பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக எடுக்க உள்ளதாகவும் இந்த படத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் ஒருவர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.

Advertisment

இந்திய சினிமாவில் கடந்த சில ஆண்டுகளாக உண்மை சம்பவங்கள் மற்றும் பிரபலங்களின் பயோபிக் திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்து வருகிறது. இதன் காரணமாக அரசியல் பிரபலங்களின் பயோபிக் திரைப்படங்களை எடுக்க பல இயக்குனர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதே சமயம் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு வெளியாக தி காஷ்மீரி ஃபைல்ஸ்,  தி கேரளா ஸ்டோரி திரைப்படங்கள் கடும் எதிர்ப்பை சந்தித்தது.

அதேபோல், கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், எம்.எஸ்.தோனி, பெரியார், காமராஜர், நடிகை சாவித்ரி உள்ளிட்ட பல சினிமா விளையாட்டு மற்றும் அரசியல் பிரபலங்களின் பயோபிக் திரைப்படங்களுக்கு வரவேற்பு கிடைத்துள்ளது. அந்த வகையில் தற்போது இந்த பட்டியலில் பிரதமர் மோடி இணைந்துள்ளார். பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய தலைவராக இருக்கும் மோடி, கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவின் பிரதமராக பதவியில் இருக்கிறார். தற்போது இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றுவரும் நிலையில், இதில் மோடி பிரதமர் வேட்பாளராக களமிறங்கியுள்ளார்.

இந்நிலையில், அவரின் வாழ்க்கை வரலாறு தற்போது திரைப்படமாக உருவாக உள்ளது. ஏற்கனவே கடந்த 2019-ம் ஆண்டு விவேக் ஓபராய் நடிப்பில், பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் வெளியான நிலையில், இந்த படம் வந்த சுவடு தெரியாமல் போய்விட்டது. இதனிடையே தற்போது 2-வது முறையாக அவரின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் தயாராக உள்ளது. இந்த படத்தில் பிரதமர் மோடியாக நடிகர் சத்யராஜ் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், பெரியாரின் தீவிர ஆதரவாளரான சத்யராஜ் மோடியின் பயோகிராபியில் எப்படி நடிப்பார் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், இது குறித்து சத்யராஜ் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், இந்த செய்தி எனக்கும் புதுசாகத்தான் இருக்கிறது. மோடி பயோகிராபி படத்தில் நடிக்க என்னை யாரும் அனுகவில்லை. இப்படி யாரோ கிளப்பி விடுகிறார்கள். அப்படி ஒரு வாய்ப்பு வந்தால் யோசிப்போம். நாத்திக கருத்துக்களை பேசிய எம்.ஆர்.ராதா பல படங்களில் ஆன்மீகவாதியாக நடித்துள்ளார் என்று கூறியுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Sathyaraj Tamil Cinema News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment