/indian-express-tamil/media/media_files/2025/07/30/sathyaraj-inciden-2025-07-30-18-30-21.jpg)
எனக்க சினிமா வாய்ப்ப கொடுத்து, சினிமாவில் என்னை நடிகனாக மாற்றியது என் சாதிக்காரர்கள் இல்லை. என் சாதிக்காரர்கள் என்னை ஊக்கப்படுத்தவில்லை. மாறாக என்னை உதாசினப்படுத்தினார்கள். சாதியை வைத்து ஒன்றும் செய்ய முடியாது என்று நடிகர் சத்யாராஜ் ஒரு நிகழ்ச்சியில் பேசியுள்ளார்.
தமிழ் ஃபிளீட் யூடியூப் சேனலில் வெளியாகியுள்ள ஒரு விடியோவில், பேசிய அவர், முதல் ஒரு பகுத்தறிவு சிந்தனை வந்ததே வாத்தியார் (எம்.ஜி.ஆர்) படம் பார்த்து தான். நான் 15 வயதில் பள்ளியில் படிக்கும்போது, எம்.ஜி.ஆர் படம் ஒன்று பார்த்தேன். அதில் ஒரு பெண்னை 4 ரவுடிகள் பலாத்காரம் செய்ய வருவார்கள். அப்போத எம்.ஜி.ஆர் வந்த அந்த பெண்ணை காப்பாற்றுவார். இறுதியில் கடளா பார்த்து தான் உங்களை அனுப்பி வைத்திருக்கிறார் என்று அந்த பெண் சொல்ல, அப்போ அந்த 4 ரவுடிகளை அனுப்பியது யார் என்று எம்.ஜி.ஆர் கேட்பார். அது தான் பள்ளிக்கூடத்தில் படிக்கும்போது முதலில் வந்த சிந்தனை.
மனிதன் நமக்கு அடையாளம், சாதி நமக்கு அவமானம். அது ஒரு காட்டுமிராண்டித்தனமான செயல். உண்மையிலேயே இந்த சாதி எந்த வகையிலும் யாருக்கும் உதவாது. நான் சினிமாவுக்கு வரும்போது என்னை உதாசினம் செய்தது என் சாதிக்காரர்கள் தான். நான் என் சொந்தக்கார பொண்ண லவ் பண்ணும்போது உங்க குடும்பம் சற்று சறுக்கி மாடி வீட்டு ஏழையாக மாறிவிட்மே். அதை பார்த்து என் சாதிக்காரர்கள் என்னை கழற்றிவிட்டார்கள். அதன்பிறகு நான் லவ் பண்ணல, எனக்க லவ்வும வரல. அதுதான் உண்மை.
அப்புறம் பிஎஸ்சி பாட்னி படிச்சேன்.அந்த காலத்தில் ஒரு 50- 45 வருஷத்திற்கு முன்னாடி பிஎஸ்சி பாட்னிக்கெல்லாம் ஒரு வால்யூயும் இல்லை. ஒரு வேலையும் கிடைக்காது. ஒரு அளவும் கிடைக்காது. என்னடா பண்ணலாம் என்று வந்தபோது நடிகர் சிவகுமார் பழக்கம் ஆனார். நான் கொஞ்சம் மிமிகிரி பண்ணுவேன். அதனால சினிமாவில் ட்ரை பண்ணலாம் என்று டிரைவிங் லைசென்ஸ் ஓட போனேன். சினிமாவில் நடிக்க முடிந்தால் சினிமால் நடிப்பு இல்லை என்றால் டிரைவர் ஆகிடுவோம் என்று போனேன்.அப்போது என் சொந்த சாதிக்காரன் சொன்னான், தில்லானா மோகனாம்பாள் படம் பாருடா. எப்படி பட்ட நடிகர் சிவாஜி, நாகேஷ், பாலையா. இதுக்கு நடுவில் நீ போய் நடிகனாயி கிளிக்கப் போறாயா என்று சொல்லி டிஸ்கரேஜ் பண்ணது என் சாதிக்காரன் தான்.
எனக்கு முதல் முதல் வாய்ப்பு கொடுத்தவர் நடிகர் இயக்குனர் டி.என்.பாலு. சட்டம் என் கையில் படம் எடுத்தவர். அவர் என்ன சாதி என்று தெரியாது. எந்த வகையிலும் கதாநாயகனாக தகுதியில்லாத எனக்கு டான்ஸ் ஆட தெரியாத எனக்கு என்ன நடிகனாக்கி அழகு பார்த்தவர் என் சாதிக்காரர் கிடையாது. எனக்கு டான்ஸ் வராத எனக்கு பாட்டு போட்டு என் பாட்டை ஹிட் பண்ணி என்னையும் ஒரு கதாநாயகனாக மிக முக்கியமான பங்கு உள்ளவர் இசையஞானி இளையராஜா. அவர் வந்து என் சாதிக்காரர் கிடையாது. அதற்கு பிறகு எனக்கு பல சக்சஸ் கொடுத்த தேவா என் சாதிக்காரர் கிடையாது. என் கூட ஜோடியாக நடிச்ச யாரும் என் சாதிக்காரர் கிடையாது. சாதி என்னாலே எந்த பிரயோஜனம் இல்லை.
கவின் என்ற ஒரு பையன் வந்து படிச்சு ஒன்றரை லட்சம் சம்பளம் வாங்குறான். அந்த குடும்பமும் படிச்சிருக்கு. எல்லா பையனும் இந்த கொலை பண்ணாவங்க குடும்பத்தை விட உயர்ந்த நிலையில் இருக்காங்க. சாதி ஒன்றுதான் பிரச்சனை. சாஸ்திரத்தில் மொத்தமும் சூத்திரம் என்று சொல்லிட்டான். இதில் என்ன மேல் பெரிய சூத்திரம், சின்ன சூத்திரம்? மொத்தமும் சூத்திரம்தான். ஆண்டன் ஜாதி வெங்காய சாதி என்று? எங்கே எப்போது நீ ஆண்டன்? ஒரு வியாபாரம் பண்ண கப்பல் ஒரு 40 வெள்ளைக்காரன் வந்து அவன்கிட்ட போய் மண்டி போட்டு இருந்தாய். இது ஆண்டன் சாதியா? எல்லா வகையிலும் இந்த சாதி என்பது ஒரு பெரிய மூளைச் செலவே செய்யப்படாது அது ஒரு நோய். அதிலிருந்து வெளியே வந்தாதான் நிம்மதியாக இருக்க முடியும் என்று கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)

Follow Us