Advertisment

மோடி பயோபிக் படத்தில் நான் நடிக்கிறேனா? நடிகர் சத்யராஜ் புது விளக்கம்

தற்போது பிரதமர் மோடியின் வாழ்க்கை திரைப்படமாக எடுக்க உள்ளதாக தகவல் வெளியான நிலையில், அதில் சத்யராஜ் நடிப்பதாக கூறப்பட்டது.

author-image
WebDesk
New Update
Sathyraja.jpg
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக எடுக்க உள்ளதாகவும் இந்த படத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சத்யராஜ் மோடி கேரக்டரில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து சத்யராஜ் விளக்கம் அளித்துள்ளார்.

Advertisment

இந்திய சினிமாவில் கடந்த சில ஆண்டுகளாக உண்மை சம்பவங்கள் மற்றும் பிரபலங்களின் பயோபிக் திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்து வருகிறது. இதன் காரணமாக அரசியல் பிரபலங்களின் பயோபிக் திரைப்படங்களை எடுக்க பல இயக்குனர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதே சமயம் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு வெளியாக தி காஷ்மீரி ஃபைல்ஸ்,  தி கேரளா ஸ்டோரி திரைப்படங்கள் கடும் எதிர்ப்பை சந்தித்தது.

அந்த வகையில் தற்போது பிரதமர் மோடியின் வாழ்க்கை திரைப்படமாக எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய தலைவராக இருக்கும் மோடி, கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவின் பிரதமராக பதவியில் இருக்கிறார். தற்போது இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றுவரும் நிலையில், இதில் மோடி பிரதமர் வேட்பாளராக களமிறங்கியுள்ளார்.

ஏற்கனவே கடந்த 2019-ம் ஆண்டு விவேக் ஓபராய் நடிப்பில், பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் வெளியான நிலையில், இந்த படம் வந்த சுவடு தெரியாமல் போய்விட்டது. இதனிடையே தற்போது 2-வது முறையாக அவரின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் தயாராக உள்ளது. இந்த படத்தில் பிரதமர் மோடியாக நடிகர் சத்யராஜ் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியானது.

இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், பெரியாரின் தீவிர ஆதரவாளராக சத்யராஜ், மோடி கேரக்டரில் நடிக்க எப்படி ஒப்புக்கொண்டார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இது குறித்து மின்னம்பலம் செய்திக்கு சத்யராஜ் விளக்கம் அளித்துள்ளார். பிரதமர் மோடி பயோபிக் குறித்து பேசிய சத்யராஜ், இந்த செய்தி எனக்கே புதிதுதான். மோடி பயோபிக் படத்தில் நடிப்பது குறித்து என்னிடம் யாரும் பேசிவில்லை. யாரோ எதையோ கிளப்பி விடுவார்கள்.

நான் கனா படத்தில் நடித்தபோது எனக்கு லண்டனில் மெழுகு சிலை வைத்திருப்பதாக சொன்னார்கள். அப்படி எந்த சிலையும் வைக்கவில்லை என்று சொன்னேன். அதை யாரும் நம்பவில்லை. இப்போது நான் மோடி படத்தில் நடிப்பதாக சொல்கிறார்கள். நான் பெரியாரிஸ்ட். இந்த படத்தில் நான் நடிக்கவில்லை என்று சத்யராஜ் விளக்கம் அளித்துள்ளார். இதன் மூலம் மோடி பயோபிக் படத்தில் சத்யராஜ் நடிக்கிறாரா என்ற கேள்விக்கு விடை கிடைத்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Sathyaraj
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment