Advertisment

சத்யராஜ் மடியில் குழந்தை... இப்போ ரஜினி பட நடிகர் : இவரை யார்னு தெரியுதா பாருங்க!

தமிழ் மற்றும் மலையாளம் சினிமாவின் முன்னணி நடிகர் நடிகர் சத்யராஜூவின் மடியில் குழந்தையாக இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

author-image
WebDesk
New Update
Sathyaraj Fahad Fazil

தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும், தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ள பிரபல நடிகர் ஒருவர் நடிகர் சத்யராஜூவின் மடியில் குழந்தை நட்சத்திரமாக அமர்ந்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

இன்றைய காலக்கட்டத்தில் வேறு மாநில நடிகர்கள் தமிழ் சினிமாவில் நடிப்பதும் தமிழ் நடிகர்கள் மற்ற மொழி திரைப்படங்களில் நடிப்பதும் வழக்கமாகிவிட்டது. அந்த வகையில், மலையாள சினிமாவில் இருந்து வந்து தமிழ் சினிமாவில் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை ஏற்படுத்திக்கொண்டவர் தான் பகத் பாசில். தமிழில் சில படங்களை இயக்கியுள்ள இயக்குனர் பாசிலின் மகன் தான் இந்த பகத் பாசில்.

மலையாளத்தில் தனது சினிமா வாழ்க்கையை தொடங்கிய பாசில், மலையாளம் தமிழ் என இரு மொழிகளிலும் பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார். அந்த வகயில் தமிழில் வெளியான சத்யராஜூவின், என் பொம்மக்குட்டி அம்மாவுக்கும், பூவிழி வாசலிலே ஆகிய படங்கள் பெரிய வெற்றிப்படங்களாக அமைந்தது. இந்த இரு படங்களின் படப்பிடிப்பு நடைபெற்ற போது எதோ ஒரு செட்டில் சத்யராஜ் மடியில் பகத் பாசில் அமர்ந்து புகைப்படம் எடுத்துள்ளார்.

இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ள நிலையில், ரசிகர்கள் பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது. சமீபத்தில், ஃபஹத் பாசில் ஃபிலிம் கம்பேனியன் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், நான்கு தசாப்தங்களாக எனது குடும்பம் திரைத்துறையில் இயங்கி வருகிறது. நான் 40 வருடங்களாக சினிமா பின்னணியில் இருந்து வரும் குடும்பத்தில் இருந்து வந்தவன். வணிகம் எவ்வளவு நிலையற்றது என்பது எனக்குத் தெரியும்.

Sathyaraj Fahad Fazil

நிதி இல்லாத ஒரு தன்மையை என்னால் எதிர்கொள்ள முடியும். அதே சமயம், ஒரு தனிநபராக உறுதியற்ற தன்மை குறித்து நான் கவலைப்படுகிறேன். மக்கள் மாறுவதை நான் பார்த்திருக்கிறேன். எனது படங்கள் வெற்றி பெற்றாலும், தோல்வியை சந்தித்தாலும் நான் நிலையாகவே இருக்க விரும்புகிறேன். இரண்டு படங்கள் நடித்துவிட்டு முடித்துக்கொள்ளலாம் என்று நினைத்தேன். இப்போது வரும் அனைத்து படங்களும் போனஸ் என்று குறிப்பிட்டிருந்தார்.

சமீபத்தில் வெளியான ஆவேஷம் படம் பகத் பாசிலுக்கு பெரிய வெற்றியை கொடுத்துள்ளார். அதனைத் தொடர்ந்து  தற்போது புஷ்பா: தி ரூல், மாரீசன் மற்றும் ரஜினிகாந்தின் வேட்டையன் ஆகிய ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அதேபோல் கடைசியாக சிங்கப்பூர் சலூனில் பார்த்த சத்யராஜ், தோழர் சேகுவேரா படத்தின் வெளியீட்டை எதிர்பார்க்கிறார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Fahad Fazil Tamil Cinema News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment