பொதுவாக சினிமா நட்சத்திரங்கள், தொழிலதிபர்கள் பலரும் தங்கள் வீட்டில் செல்லப்பிராணிகளை வளர்ப்பது வழக்கமான ஒன்று. இதில் பலரும் நாய்களை தான் அதிகம் வளர்ப்பார்கள். ஒருசிலர் வழக்கத்திற்கு மாறாக மற்ற விலங்குகளை வளர்ப்பார்கள். அந்த வகையில் யாரும் எதிர்பார்க்காத வகையில், நடிகர் செல்வா தனது வீட்டில் செல்லப்பிராணியாக கழுதை மற்றும் பன்றியை வளர்த்து வருகிறார்.
Advertisment
1991-ம் ஆண்டு கஸ்தூரி ராஜா இயக்கத்தில் வெளியான ஆத்தா உன் கோயிலிலே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் செல்வா. தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக டாக்டர் ராஜசேரின் சகோதரரான இவர், அடுத்து தம்பி ஊருக்கு புதுசு, ராக்காயி கோயில், கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் சக்திவேல், புதிய பராசக்தி, நாட்டுப்புற நாயகன் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்.
1998-ம் ஆண்டு கோல் மால் என்ற படத்தின் மூலம் இயக்குனராகவும் அறிமுகமான செல்வா, அடுத்து படங்களில் நடிக்காத நிலையில், சில ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு, 2011-ம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் சேரன் நடித்த யுத்தம் செய் படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். அடுத்து முகமூடி, ஈட்டி உள்ளிட்ட படங்களில் நடித்திருந்த செல்வா, கடைசியாக, விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான ரெய்டு படத்தில் அவரின் அப்பாவாக செல்வா நடித்திருந்தார்.
Advertisment
Advertisements
சமீபத்தில் இவர் வீடு மற்றும் பன்னை தொடர்பான ஹோம்டூர் வீடியோ வைரலாக பரவியது. பொதுவாக நாய்களை செல்லப்பிராணிகளாக வளர்க்கும் நடிகர் நடிகைகளுக்கு மத்தியில் செல்வா, தனது வீட்டில் கழுதை மற்றும் வெள்ளை பன்றியை செல்லப்பிராணியாக வளர்க்கிறார். இது குறித்து அவரிடம் கேட்டபோது, ஒருநாள், வெளியில் கழுதைகளை பார்த்தேன். அப்போதே இவற்றை வீட்டில் வளர்க்க வேண்டும் என்று முடிவு செய்தேன். அன்றில் இருந்து வாங்க வேண்டும் என்று பல முறை முயற்சித்தேன்.
2 வருடங்களுக்கு பிறகு பெங்களூருவில் இருந்து தான் இந்த கழுதைகள் கிடைத்தது. அதன்பிறகு இவற்றை வளர்க்க தொடங்கினோம். இந்த கழுதைகளின் பால் பல ஆயிரம் ரூபாய் விலை என்று சொல்கிறார்கள். ஆனால் எங்களுக்கு பால் விற்கும் எண்ணமே இல்லை. சிறிதளவு பால் இருந்தாலும் கொடுங்கள் ரூ500 பணம் வேண்டுமானாலும் தருகிறோம் என்று சொன்னார்கள். ஆனால், அப்போது கழுதை குட்டி போடவில்லை. ஆனாலும் மாடுகளில் கறப்பது போல், லிட்டர் கணக்கில் கழுதையில் பால் வராது என்று கூறியுள்ளார்.
அதேபோல் வீ்ட்டில் இருக்கும் பன்றிக்கு, ஏ.சி அறை அமைக்கப்பட்டுள்ளது. நாம் சாப்பிடும் அனைத்தையும் இது சாப்பிடும் இதற்கு ஆக்ஸிஜன் என்று பெயர் வைத்தள்ளோம். நாங்கள் ஆக்ஸி என்று கூப்பிடுவோம். நாங்கள் வெளியில் சென்றால் இதனை தூங்க வைத்துவிட்டு தான் செல்வோம். இல்லை என்றால் உடன் வருகிறேன் என்று அடம் பிடிக்கும். குட்டியாக இருந்தபோது பிடித்து வந்தோம். இப்போது வளர்ந்துவிட்டது என்று செல்வாவும் அவரது மனைவியும் கலாட்ட ப்ளஸ் யூடியூப் சேனலில் கூறியுள்ளனர்.