/indian-express-tamil/media/media_files/ktFE7P0B4fjY8fmyGQzj.jpg)
ஸ்ருதிஹாசன் - சாந்தனு
தனது உறவுகள், உணர்ச்சிகள் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து இதுவரை வெளிப்படையாக பேசி வந்த நடிகை ஸ்ருதிஹாசன், இனிமேல் இப்படி பேசமாட்டார் என்று அவரின் செய்தித்தொடர்பாளர் கூறியுள்ளார்.
இந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக, உலக நாயகன் கமல்ஹாசனின் மகள் என்ற அடையாளத்துடன் சுற்றி வரும் ஸ்ருதிஹாசனுக்கு தற்போது தமிழில் அதிகமான பட வாய்ப்புகள் இல்லை என்றாலும், தெலுங்கு மற்றும் இந்தியில் பிஸியான நடிகையாக வலம் வருகிறார். சமீபத்தில் இவர் பிரபாஸ்க்கு ஜோடியாக நடித்து வெளியான சலார் பார்ட் 1 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
இந்நிலையில், ஸ்ருதிஹாசன் கடந்த சில வருடங்களாக ஆர்டிஸ்ட்சாந்தனு ஹசாரிகாவை காதலித்து வந்தார். இவர்கள் இருவரும் ஒரே வீட்டில் தங்கி டேட்டிங்கில் இருப்பதாக கூறி வந்த நிலையில், அவ்வப்போது சமூக வலைதளங்களில் போட்டோஸ் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வந்தனர். இதனிடையே சமீப காலமாக ஸ்ருதிஹாசன் தனது சமூகவலைதளத்தை பயன்படுத்தாமல் இருக்கிறார்.
இதன் காரணமாக ஸ்ருதியும் சாந்தனுவும் ஒரு மாதமாக பிரிந்து வாழ்வதாக சில வதந்திகள் பரவத்தொடங்கியது. சமீபத்தில் மீண்டும் தனது சமூகவலைதள பக்கத்திற்கு திரும்பிய ஸ்ருதிஹாசன், வழக்கம்போல் புகைப்படங்களை பதிவிட்டு வந்தாலும் சாந்தனு புகைப்படங்கள் வெளியிடுவதை தவிர்த்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் அவர்கள் இருவரும் இன்ஸ்டாகிராமில் ஒருவரையொருவர் பின்தொடரவில்லை.
இதனிடையே சமீபத்தில் தனது சமூகவலைதள பக்கத்தில் இருந்து சாந்தனு தொடர்பான புகைப்படங்களை நீங்கிய ஸ்ருதிஹாசன், இது ஒரு பைத்தியக்காரத்தனமான பயணம். இந்த பயணத்தில் என்னை பற்றியும் மக்களை பற்றியும் நன்கு புரிந்துகொண்டேன் என்று பதிவிட்டிருந்தார். இந்த பதிவு இணையத்தில் வைரலாக பரவிய நிலையில், ஸ்ருதிஹாசன் தனது காதலரை பிரிந்துவிட்டார் என்று இணையத்தில் தகவல்கள் வெளியாக தொடங்கியது.
இந்நிலையில், டைம்ஸ்ஆப் இந்தியா வெளியிட்டுள்ள செய்தியில், சாந்தனுவை பிரிந்தது பற்றி ஸ்ருதிஹாசன் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்காமல் மௌனமாக இருந்து வரும் நிலையில், அவரது செய்தித்தொடர்பாளர், ஸ்ருதிஹாசன் இனி தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து எங்கும்பேச வேண்டாம் என்று முடிவு செய்துள்ளதாக கூறியுள்ளார் என குறிப்பிட்டுள்ளது.
இதன் மூலம் ஸ்ருதிஹாசன் சாந்தனுவை பிரிந்தது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில், 4 ஆண்டுகளாக டேட்டிங்கில் இருந்த இவர்கள் பிரிவதற்கு காரணம் என்ன என்பது குறித்து ரசிகர்கள் நெட்டிசன்கள் என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.