Advertisment
Presenting Partner
Desktop GIF

பெற்றோர்களுக்கு விழிப்புணர்வை தருகிறதா? சித்தா படம் எப்படி?

சித்தார்த் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள சித்தா படத்தின் விமர்சனம்

author-image
WebDesk
New Update
Siddha

சித்தா படம்

நடிகர் சித்தார்த் நடிப்பில் எமோஷனல் டிராமா படமாக வெளிவந்திருக்கும் "சித்தா" படத்தின் விமர்சனம்

Advertisment

கதைக்களம்

நாயகன் சித்தார்த் தன் அண்ணன், அண்ணி மற்றும் அவர்களின் குழந்தையுடன் ஒரு சராசரி வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். திடீரென தன் அண்ணன் இறந்து போகவே என்ன செய்வதென்றே தெரியாமல் நிற்கும் சித்தார்த்துக்கு அண்ணனின் குழந்தை மட்டுமே ஆறுதலாக இருக்கிறது. அண்ணனின் மகளுக்கும் சித்தார்த்துக்கும் இடையேயான அன்பு, பாசம் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே செல்கிறது.

இதனால் தன்னுடைய சித்தப்பாவான சித்தார்த்தை "சித்தா" என்று அன்போடு அந்த குழந்தை அழைக்கிறது. இதனிடையே சித்தார்த் நாயகி நிமிஷாவை காதலிக்கிறார். இப்படியே அவருடைய வாழ்க்கை சென்று கொண்டிருக்கும்போது இடையில் எதிர்பாராத விதமாக அந்த குழந்தை காணாமல் போகிறது அந்த குழந்தைக்கு என்ன ஆனது? அந்த குழந்தையை சித்தார்த் மீட்டாரா? என்பதே இந்த படத்தின் மீதி கதை.

நடிகர்களின் நடிப்பு 

சித்தார்த்தின் திரை வாழ்வில் அவருடைய பெஸ்ட் பர்பாமன்ஸ் படம் இது, என்று எளிதாக சொல்லும் வகையில் அவருடைய எதார்த்தமான நடிப்பும், அழுத்தமான கதாபாத்திரமும் ரசிகர்களை கலங்க வைக்கிறது. பாசம், காதல், ஏக்கம், கோவம், என பல்வேறு விதமான நடிப்பின் மூலம் இந்த கதைக்கு உயிர் கொடுத்திருக்கிறார். இப்படத்தின் நாயகி என்றே குழந்தை சஹஷ்ரா ஸ்ரீயை சொல்லலாம்.

படத்தில் மற்ற கதாபாத்திரங்களை தன் அசாத்திய நடிப்பின் மூலம் அசால்டாக வென்றிருக்கும் சிறுமிக்கு மிகப்பெரிய பாராட்டுகள். இன்னும் பல ஆண்டுகளுக்கு பெண் குழந்தைகளை பெற்ற பெற்றோர்களுக்கு இந்த சிறுமியின் கதாபாத்திரம் மிகப்பெரிய தாக்கமாக அமையும் என்பது உறுதி. நாயகி நிமிஷா தன் முதல் தமிழ் படத்திலேயே நடிப்பில் ஸ்கோர் செய்து இருக்கிறார். அண்ணியாக வரும் அஞ்சலி நாயரின் நடிப்பும் சிறப்பு.

இயக்கம் மற்றும் இசை

இன்றைய காலகட்டத்தில் சமூகத்தில் பெண் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளில் இருந்து பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்னும் மைய கருத்தை வைத்துக்கொண்டு ஒரு ஆழமான, அழுத்தமான திரைக்கதை அமைத்து ஒரு நல்ல எமோஷனல் டிராமா படத்தை கொடுத்திருக்கிறார். இயக்குனர் அருண்குமார். திபு தாமஸின் பாடல்களும், விஷால் சந்திரசேகரின் பின்னணி இசையும் படத்துக்கு உயிர் கொடுத்திருக்கிறது.

படம் எப்படி?

பெண் குழந்தைகள் கடத்தப்படுவது, பாலியல் ரீதியாக அனுபவிக்கும் தொல்லைகள் என இன்றைய பெற்றோர்களுக்கு விழிப்புணர்வை கொடுப்பதற்காக பல காட்சிகளும் வசனங்களும் வைக்கப்பட்டு இருப்பது பாராட்டுக்குரியது. பெற்றோர்களுக்கு மட்டுமல்லாமல் பெண் பிள்ளைகளுக்கும் எது சரி..எது தவறு...என்பது போன்ற பல உண்மைகளை இப்படத்தின் வாயிலாக கொடுத்திருக்கிறார்கள்.

என்னதான் படத்தின் முதல் பாதி சற்று பொறுமையாக சென்றாலும் அது ஒரு குறையாக நம் மனதில் நிற்கவில்லை.அதற்கு காரணம் அவர்கள் சொல்லப்பட்டிருக்கும் அழுத்தமான திரைக்கதை. தமிழ் சினிமாவில் எப்போதாவது வரும் இது போன்ற தரமான மக்கள் கொண்டாடவேண்டும். மொத்தத்தில் பெண் பிள்ளைகளுக்கும் அவர்களது பெற்றோர்களுக்கும் ஒரு படமாக மட்டுமல்லாமல் பாடமாகவும் "சித்தா" அமைந்திருக்கிறது.

  • நவீன் சரவணன்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Siddharth Tamil Cinema Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment