Advertisment

கை, கால் செயலிழந்த வெங்கல் ராவ்: உதவிக்காரம் நீட்டிய சிம்பு; குவியும் பாராட்டுக்கள்!

உடல்நல்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள நடிகர் வெங்கல் ராவுக்கு நடிகர் சிம்பு உதவி செய்துள்ளார்.

author-image
WebDesk
New Update
tamil cinema Simbu Vengal rao

வெங்கல் ராவ் - சிம்பு

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

நகைச்சுவை நடிகர் வெங்கல் ராவ் தனக்கு உடல்நிலை சரியில்லை நடிகர்கள் தனக்கு உதவி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்த நிலையில், தற்போது நடிகர் சிம்பு அவருக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளார்.

Advertisment

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி காமெடி நடிகராக திகழ்ந்தவர் வைகை புயல் வடிவேலு. தனக்கென ஒரு டீமை உருவாகி அதை வைத்து காமெடி காட்சிகளை உருவாகி வந்த வடிவேலுவுடன் பல படங்களில், காமெடி கேரக்டரில் நடித்திருந்தவர் வெங்கல் ராவ். ஒரு கட்டத்தில் வடிவேலுக்கு பட வாய்ப்பு குறைந்து சில ஆண்டுகள் பட வாய்ப்பு இல்லாமல் இருந்த போது வெங்கல் ராவுக்கும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

பல ஆண்டுகளாக சினிமாவில் ஃபைட்டராக இருந்த இருந்த வெங்கல்ஒரு கட்டத்தில் சண்டைக்கு உடல் ஒத்துழைக்காததால்காமெடி நடிகராக வடிவேலுவின் குழுவில் இணைந்தார். வடிவேலுவுடன் தலைநகரம்எலி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள வெங்கல் ராவ்ஒரு படத்தில் தலையில் இருந்து கையை எடுத்தால் கடித்துவிடுவேன் என்று சொல்லும் ஒரு காமெடி காட்சி இன்றுவரை பேசப்படும் ஒரு காட்சியாக அமைந்துள்ளது.

அதேபோல் கந்தசாமி படத்தில் வடிவேலுவின் தேங்காய் கடையில்தேங்காய் வாங்க வரும் ஆசாமியாக சிறப்பாப நடித்திருந்தார். வடிவேலுவுக்கு வாய்ப்பு இல்லாதபோது பெரும் துயரத்தை சந்தித்த இவர்வடிவேலு ரீ-என்டரி ஆன நாய்சேகர் ரிட்டன்ஸ் என்ற படத்திலும் நடித்திருந்தார். இந்த படம் சரியாக போகாத நிலையில்வெங்கல் ராவ் குறித்து அதன்பிறகு வேறு எந்த தகவலும் இல்லை.

இதனிடையே தற்போது தனக்கு உடல் நிலை சரியில்லை என்று வீடியோ பதிவை வெளியிட்டுள்ள வெங்கல் ராவ்எனக்கு கைகால் விழுந்து போச்சுநடக்க முடியவில்லை. பேசவும் முடியவில்லை. சிகிச்சைக்காக மருத்துவமனை செல்லபணம் இல்லை. மருந்து வாங்க கூட பணம் இல்லை. சினிமா நடிகர் சங்கங்கள் எனக்கு உங்களால் முடிந்த உதவி செய்யுங்கள் இதற்கு மேல் என்னால் பேச முடியவில்லை என்று கூறியிருந்தார்.

இந்த வீடியோ பதிவு இணையத்தில் வைரலாக பரவியதை தொடர்ந்து, ரசிகர்கள் பலரும், வடிவேலு அவருக்கு உதவி செய்வாரா என்ற கேள்வியை எழுப்பிய நிலையில், தற்போது நடிகர் சிம்பு வெங்கல் ராவக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளார். இதுகுறித்து வெளியான தகவலின்படி சிம்பு வெங்கல் ராவுக்கு ரூ2 லட்சம் நிதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிம்புவின் இந்த உதவிக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வரும் நிலையில், வெங்கல் ராவ் விரைவில் குணமடைய வேண்டும் என்று வேண்டிக்கொள்வதாக கூறி வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Simbu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment