மீண்டும் தனுஷ் குறித்து பேசினாரா சிம்பு? வலைதளத்தில் வெடித்த மோதல்
கடந்த ஆண்டு சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த நிலையில் வெந்து தணிந்தது காடு படத்தின் வெற்றி சிம்புவை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக சிம்பு – தனுஷ் இடையே பனிப்போர் நிலவி வருவதாக அவ்வப்போது தகவல் வந்தாலும் சமீப காலமாக அவ்வாறான தகவல்கள் எதுவும் வெளியாகாமல் இருந்த நிலையில், தற்போது மீண்டும் அந்த சர்ச்சை பெரும் வைரலாக பரவி வருகிறது
Advertisment
விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா ஆகிய இரண்டு வெற்றிப்படங்களை தொடர்ந்து சிம்பு – கவுதம்மேனன் கூட்டணியில் உருவாகியுள்ள 3-வது படம் வெந்து தணிந்தது காடு. முதல் இரண்டு படங்களை போல் இல்லாமல் வித்தியாசமாக கேங்ஸ்டர் படமான வெந்து தணிந்தது காடு பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 15-ந் தேதி வெளியானது.
எழுத்தாளர் ஜெயமோகன் எழுத்தில் உருவாக இந்த படம் ரசகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஏற்கனவே கடந்த ஆண்டு சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த நிலையில் வெந்து தணிந்தது காடு படத்தின் வெற்றி சிம்புவை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியுள்ளது. இதன் காரணமாக டிவி சேனல்களுக்கு பேட்டி அளித்து வரும் அவர், ஒரு பேட்டியில் கூறி சில கருத்துக்கள் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது.
அந்த பேட்டியில் சிம்பு வெளிப்படையாக தனது சக நடிகரான தனுஷை தாக்கி சில கருத்துக்களை கூறியுள்ளதாக பேசப்படுகிறது. பல மொழி படங்களில் நடித்தால் பெரிய மனிதர்களாகி விட்டதாக சிலர் நினைக்கிறார்கள். ஹாலிவுட் படங்களில் நடிப்பதால் மட்டும் பெரியவராகிவிட முடியாது. பல மொழிகளில் நடித்தாலும், நாம் செய்யும் பணியில் சரியாக இருந்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் அப்போதுதான் நாம் பெரிய மனிதர்களாக மாற முடியும் என்று கூறியுள்ளார்.
சிம்புவின் இந்த கருத்து தனுஷ் ரசிகர்களை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இருவரின் ரசிகர்களும் சமூக வலைதளங்களில் கருத்து மோதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். சிம்பு, தனுஷ் இருவருக்கும் இடையே திரையுலகில் ஏற்கனவே கடும் போட்டி நிலவுகிறது. இவர்களின் படங்கள் வெளியாகும் போது இரு தரப்பு ரசிகர்களுக்கும் சமூக வலைதளங்களில் சண்டையும், வாக்குவாதமும் ஏற்படுவது வழக்கம்.
The difference between Simbu and Dhanush is Dhanush doesn’t care what Simbu does but Dhanush lives rent free in Simbu’s head.. pic.twitter.com/VtGGuGgIoq
அந்த வகையில் பல ஆண்டுகளாக இவர்களுக்குள் இருக்கும் இந்த பனிப்போர் முடிவில்லாமல் வந்தது. சில ஆணடுகளாக இந்த மோதல் குறித்து எதுவும் தகவல் வெளியாகாத நிலையில், தற்போது சிம்பு ஏன் இப்படி ஒரு கருத்தை தெரிவித்தார் என்ற விமர்சனமும் எழுந்துள்ளது. அதேபோல் தனுஷ் இதுவரை சிம்புவை தாக்கும் வகையில் பேசியதில்லை. சிம்புவுக்கு ஏன் இந்த வேலை என்று தனுஷ் ரசிகர்கள் தீவிரமாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“