Tamil Cinema Actor Simbu Update : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் சிம்பு தற்போது தன்னுடன் ஈஸ்வரன் படத்தில் ஜோடியாக நடித்த நிதி அகர்வாலுடன் ஒன்றாக ஒரே வீட்டில் வசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழில் கடந்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியான ஜெயம் ரவியின் பூமி மற்றும் சிம்புவின் ஈஸ்வரன் ஆகிய இரண்டு படங்களின் மூலம் தமிழ் திரையுலகில் என்டரி கொடுத்தவர் நிதி அகர்வால். இந்த இரண்டு படங்களும், கலவையான விமார்சனங்களை பெற்றாலும், நிதி அகவர்வாலுக்கு தமிழகத்தில் ரசிகர்கள் கூட்டம் உருவாக தொடங்கியது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக சென்னையில் ஒரு ரசிகர் நிதி அகர்வாலுக்கு கோவில் கட்டியது பெரும் வைரலாக பரவியது.
கடந்த 1993-ம் ஆண்டு ஹைதராபாத்தில் பிறந்த நிதி அகர்வால, 2014-ம் ஆண்டு நடைபெற்ற ஃபெசினோ மாடல் அழகி போட்டியில் இறுதிச்சுற்றுவரை சென்றார். இதன் காரணமாக இந்தியின் டைகர் ஷெரிப் படத்தில் அறிமுகமான இவர், தொடர்ந்து தெலுங்கில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக நடித்தார் அதன்பிறகு ஒரு சில படங்களில் நடித்த இவர், கடந்த பொங்கல் தினத்தில் தமிழில் வெளியான சிம்புவின் ஈஸ்வரன் படத்திலும் ஜெயம் ரவியின் பூமி படத்திலும் நாயகியாக நடித்தார்.
இந்த இரண்டு படங்களும் விமர்சனரீதியாக வரவேற்பை பெறாத நிலையில், ஈஸ்வரன் படத்தில், இடம்பெற்ற மாங்கல்யம் தந்துனானே பாடல் பட்டி தொட்டி எங்கிலும் பட்டையை கிளப்பியது. அதன்பிறகு தமிழில் பட வாய்ப்பு கிடைக்காத நிதி அகர்வால்,தற்போது இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க உள்ளார். இதனைத்தொடர்ந்து தெலுங்கில், ஹரிஹர வீர மல்லு என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், தற்போது 29 வயதாகும் நடிகை நிதி அகர்வால், 38 வயதாக நடிகர் சிம்புடன் ஒரே வீட்டில் வசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சிம்புவுக்கு விரைவில் திருமணம் செய்ய வேண்டி அவரது பெற்றோர்கள் பெண் பார்த்து வரும் நிலையில், சிம்பு விரைவில், நிதி அகர்வாலை திருமணம் செய்துகொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. இநத தகவல் காட்டுத்தீ போல் பரவி வரும் நிலையில், இது தொடர்பாக இரு தரப்பிலும் எவ்வித தகவலும் இல்லை.
சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் நிதி அகர்வாலுக்கு இன்ஸ்டாகிராமில், 15.9 மில்லியன் ஃபாலோவார்ஸ் உள்ளனர். தற்போது சிம்புவுடன் இவர் சேர்ந்து இருக்கும் தகவல் வெளியாகியுள்ளதால் கூகுளில் நிதி அகர்வால் பற்றிய தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil