/indian-express-tamil/media/media_files/2025/09/26/kalaipuli-dhanu-str-49-2025-09-26-18-33-22.jpg)
சிம்பு – வெற்றிமாறன் கூட்டணியில் ஒரு படம் தயாராக உள்ளது என்ற அறிவிப்பு வெளியானபோதே ரசிகர்கள் மத்தியில் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருந்த நிலையில், தற்போது இந்த படத்தின் ப்ரமோ ரிலீஸ் குறித்து தயாரிப்பாளர் கலைப்புலி தாணு புதிய அப்டேட் கொடுத்துள்ளார்,
தமிழ் சினிமாவில் சில படங்களே இயக்கியிருந்தாலும், இயக்கிய அனைத்து படங்களையும் வெற்றிப்படங்களாகவும், விமர்சனரீதியாக பாராட்டுக்களை பெற்ற படங்களாக கொடுத்து முன்னணி இயக்குனராக வளர்ந்துள்ளவர் வெற்றிமாறன். கடைசியாக இவர் இயக்கிய விடுதலை 2 படம் பெரிய அளவில் பேசப்பட்ட நிலையில், இந்த படத்தை முடித்து அடுத்து சிம்பு நடிக்கும் படத்தை இயக்க உள்ளதாகவும், இந்த படத்தை கலைப்புலி தாணு தயாரிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியானது.
இதனைத் தொடர்ந்து இந்த படத்தின் ப்ரமோவுக்கான ஷூட்டிங் பணிகள் தொடங்கிய நிலையில், இடையில் இந்த படம் கைவிடப்பட்டது என்று தகவல்கள் பரவ தொடங்கியது. ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகாத நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு, கலைப்புலி தாணு சிம்பு நடிப்பில் வெற்றிமாறன் ஷூட் செய்த ப்ரமோவில் இருந்து ஒரு க்ளிப்பை வெளியிட்டு படம் கைவிடப்படவில்லை என்பதை உறுதி செய்திருந்தார். இந்த க்ளிப் பெரிய வரவேற்பை பெற்றிருந்தது.
இதனிடையே, ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்த சிம்பு மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகும் படத்தின் அறிவிப்பு, குறித்து தயாரிப்பாளர் வெற்றிமாறன் புதிய அப்டேட் கொடுத்துள்ளார். தற்காலிகமாக எஸ்.டி.ஆர் 49 என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் ப்ரமோ வீடியோ, வரும் அக்டோபர் 4-ம் தேதி வெளியாக உள்ளதாக அறிவித்துள்ளார். மேலும் இந்த படத்தை சிம்புவின் ஆத்மன் சினி ஆர்ட்ஸ் மற்றும் தாணுவின் வி க்ரியேஷன்ஸ் கூட்டணியில் தயாராக உள்ளது.
Mark your calendars! 🗓
— Kalaippuli S Thanu (@theVcreations) September 26, 2025
The most awaited combo will be revealed in the promo.
Promo drops on Oct 4th 🔥@SilambarasanTR_@VetriMaaran@AtmanCineArts#STR49#VetriMaaran#Simbu#VCreations47pic.twitter.com/jx9hJCLn7G
சில வாரங்களுக்கு முன்பு, வெளியான இந்த படத்தின் ப்ரமோ க்ளிப் ஒன்றில், சிம்புவின் நிழல் உருவம், கையில் ஆயுதத்துடன், ஆவேசமாக நடந்து வருவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இந்த காட்சி ‘வட சென்னை’ படங்களின் சாயலை நினைவுபடுத்தியது. அந்தக் காட்சியின் இருண்ட, கம்பீரமான மற்றும் அழுத்தமான பின்னணி, வெற்றிமாறனின் பாணியை உறுதி செய்தது. மேலும் இந்த படத்திற்காக வட சென்னை தயாரிப்பாளரான தனுஷிடம் வெற்றிமாறன் என்.ஓ.சி வாங்கியதாகவும் தகவல்கள் வெளியானது.
எஸ்.டி.ஆர். 49 திரைப்படம் மூலம், சிம்பு ஒரு அழுத்தமான, புரட்சிகரமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். யதார்த்தமான கதைகளை இயக்குவதில், பெயர் பெற்ற வெற்றிமாறனுடன், சிம்பு முதன்முறையாக இணைந்துள்ளதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. அக்டோபர் 4 நெருங்க நெருங்க, ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.