வடிவேலு பேச்சால் கிடைத்த வாய்ப்பு; அம்மா இருந்தால் இப்போ நான் எம்.பி: நடிகர் சிங்கமுத்து ஓபன் டாக்!

சிங்கமுத்து மகன் கார்த்திக் சிங்கா முதல் படமான மாமதுரை படத்தில் கூட, வடிவேலு முக்கிய கேரக்டரில் நடித்திருந்திருப்பார். நெருங்கிய நட்புடன் சகோதரர்கள் போல் இருந்த இவர்கள் ஒரு கட்டத்தில் பிரிந்தனர்.

சிங்கமுத்து மகன் கார்த்திக் சிங்கா முதல் படமான மாமதுரை படத்தில் கூட, வடிவேலு முக்கிய கேரக்டரில் நடித்திருந்திருப்பார். நெருங்கிய நட்புடன் சகோதரர்கள் போல் இருந்த இவர்கள் ஒரு கட்டத்தில் பிரிந்தனர்.

author-image
WebDesk
New Update
Singamuthu Vadivelu

தமிழ் சினிமாவில், காமெடி நட்சத்திரங்களாக இருக்கும் வடிவேலு – சிங்கமுத்து இடையேயான மோதல் பலரும் அறிந்த ஒன்று. ஆனால் வடிவேலு செய்த செயலால் எனக்கு எம்.பி போஸ்ட் கிடைக்கும் அளவுக்கு இருந்தது என்று சிங்கமுத்து கூறியுள்ளார்.

Advertisment

1987-ம் ஆண்டு வெளியான நேரம் நல்லா இருக்கு என்ற படத்தின் மூலம் பிரபலமானவர் சிங்கமுத்து. தொடர்ந்து பல வெற்றிப்படங்களில், காமெடி மற்றும் முக்கிய கேரக்டரில் நடித்திருந்த இவர், ஒர கட்டத்தில் நடிகர் வடிவலுவுடன் இணைந்து பல ஹிட் காமெடிகளை கொடுத்துள்ளார், கார்மேகம், பகவதி, திமிரு, ஈரநிலம், கிரி, கோவில், உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் இந்த கூட்டணி காமெடியில் அசத்தியுள்ளது. இன்னும் இவர்கள் நடித்த பல காட்களில் ரசிகர்களிடம் வரவேற்பை பெறுகிறது.

சிங்கமுத்து மகன் கார்த்திக் சிங்கா முதல் படமான மாமதுரை படத்தில் கூட, வடிவேலு முக்கிய கேரக்டரில் நடித்திருந்திருப்பார். நெருங்கிய நட்புடன் சகோதரர்கள் போல் இருந்த இவர்கள் ஒரு கட்டத்தில் பிரிந்தனர். அதன்பிறகு சிங்கமுத்து சூரி உள்ளிட்ட நடிகர்களுடன் இணைந்து நடிக்க தொடங்கிய நிலையில், வடிவேலு, தனக்கென ஒரு குழுவை வைத்துக்கொண்டு காமெடியில் களமிறங்கினார். தற்போது கேரக்டர் நடிகராக மாறியுள்ள வடிவேலு, சமீபத்தில் வெளியான மாரீசன் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.

நிலத்தகராறு காரணமாக சிங்கமுத்து மீது வடிவேலு புகார் அளித்திருந்தார். இதனால் இருவரும் பிரிந்த நிலையில், வடிவேலு, தி.மு.க.வில் இணைந்து பிரச்சாரத்தில் களமிறங்கியுள்ளார். இந்த பிரசசாரத்தில் விஜயகாந்த் – ஜெயலலிதா ஆகியோரை கடுமையாக விமர்சனம் செய்ய அவரை பார்க்க கூட்டம் அதிகமாகியுள்ளது. இந்த கூட்டம் ஓட்டாக மாறினால் என்ன செய்வது என்று யோசித்த ஜெயலலிதா, இவருக்கு சமமாக யார் இருக்கிறார் என்று விசாரிக்க, பலரும் சிங்கமுத்து பெயரை கூறியுள்ளனர். அதன்பிறகு அவரை அழைக்குமாறு கூறியுள்ளார்.

Advertisment
Advertisements

முதலில் இதை யாரோ கிண்டல் செய்ய போன் செய்கிறார்கள் என்று நினைத்த சிங்கமுத்து 3 முறை போன் செய்த பின்புதான ஜெயலலிதா என்பதை உணர்ந்துகொண்டு அவரை பார்க்க சென்றுள்ளார். அப்போது அவர் சரியாக பேசுவாரா என்பதை அறிய பலவகைகளில் ஜெயலலிதா பேச்சு கொடுக்க அனைத்திற்கும், சிங்கமுத்து சரியான பேசி அசத்தியுள்ளார். அதனால் அவரை பிரச்சாரத்தில் களமிறங்கியுள்ளார். பிரச்சாரத்தில் சிங்கமுத்து பேசுவதை கேசட்டில கேட்டு ரசித்த ஜெயலலிதா சரியாக சூப்பராக பேசுகிறார் என்ற பாராட்டியுள்ளார்.

அதன்பிறகு, கண்டிப்பாக உங்களுக்கு ஒரு வாய்ப்பு இருக்கிறது. உங்கள் ஊர்காரர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் எம்.பி ஆனார் உங்களுக்கு தெரியுமா என்று கேட்டுள்ளார். அந்த மாதிரி சிங்கமுத்துவையும் எம்.பி ஆக்க நினைத் ஜெயலலிதா அதற்குள் இறந்துவிட்டார். இன்றைக்கு அம்மா உயிருடன் இருந்திருந்தால் நான் எம்.பி என்று சாய் வித் சித்ரா நிகழ்ச்சியில் நடிகர் சிங்கமுத்து பேசியுள்ளார். 

Tamil Cinema Update Tamil Cinema News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: