Advertisment

சிவாஜியும் குயிலும்... பாடகி சொன்னதால் பலநாள் பழக்கத்தை கைவிட்ட சிவாஜி

பாடகி சொன்ன ஒற்றை வார்த்தையால் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தனது பல ஆண்டு பழக்கத்தை கைவிட்டுள்ளார்.

author-image
WebDesk
Sep 06, 2023 17:07 IST
sivaji

நடிகர் திலகம் சிவாஜி கணேசன்

க்ளாசிக் சினிமாவில் அதிக ரசிகர்களை கொண்ட முக்கிய நடிகர்களில் ஒருவாராக திகழ்ந்தவர் சிவாஜி கணேசன். 1950-களில் வெளியான பராசக்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான சிவாஜி கணேசன், நடிகர் திலகம் என்ற அடைமொழியுடன் கடைசி வரை சினிமாவுக்காகவே வாழ்ந்தவர். மேலும் நடிப்பில் பல்வேறு பரிணாமங்களை காட்டிய சிவாஜி இன்றைய நடிகர்கள் பலருக்கும் ஒரு இன்ஸ்பிரேஷனாக இருக்கிறார்.

Advertisment

சினிமாவில் சிவாஜி கணேசன் முக்கிய நடிகராக இருந்தாலும், அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பலரும் அறியாத தகவல்கள் பல உள்ளன. அந்த வகையில் பாடகி சொன்னதால் தனது நீண்டநாள் பழக்கத்தை சிவாஜி கைவிட்ட சம்பவம் குறித்து தற்போது தெரியவந்துள்ளது. நடிப்பில் சிவாஜி கோலாச்சியது போல் பாடகியாக பெரும் உச்சத்தை தொட்டவர் லதா மங்கேஷ்கர்.

சிவாஜி – லதா மங்கேஷ்கர் இடையே அண்ணன் தங்கை உறவு இருந்துள்ளது. இருவரும் குடும்பத்தின் அடிப்படையில் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளனர். அதேபோல் லதா மங்கேஷ்கர் சென்னை வரும்போது சிவாஜி வீட்டிலும், சிவாஜி மும்பை செல்லும்போது லதா மங்கேஷ்கர் வீட்டிலும் தங்குவது வழக்கமாக நடைபெறும் நிகழ்வுகள். அந்த அளவிற்கு இவர்களுக்கு இடையில் உறவுமுறை பலமாக இருந்துள்ளது.

அப்படி ஒருமுறை சிவாஜி வீட்டுக்கு லதா மங்கேஷ்கர் வந்தபோது சிவாஜியின் வீட்டில் குயில்கள் கூண்டில் அடைக்கப்பட்டுடிருந்துள்ளன. இந்த குயில்களை பார்த்த லதா மங்கேஷ்கர் இவைகளை ஏன் அடைத்து வைத்துள்ளீர்கள் என்று கேட்டபோது சிவாஜி அடித்து சாப்பிடுவதற்காகத்தான் என்று கூறியுள்ளார். அப்போது லதா மங்கேஷ்கர் சுதந்திரமாக பறக்கும் பறவைகளை இப்படி கூண்டில் அடைத்து வைக்கலாமா என்று கேட்டுள்ளார்.

இதை கேட்ட சிவாஜி உடனடியாக அனைத்து குயில்களையும் திறந்துவிடுமாறு கூறியுள்ளார். அதன்படி குயில்கள் திறந்துவிடப்பட்ட நிலையில், சிவாஜியின் வீட்டை சுற்றிலும் குயில்கள் கூட்டமாக இருந்துள்ளது. இதை கவனித்த லதா மங்கேஷ்கர் இதற்காக ஒரு பாடலையும் பாடி மகிழ்ந்துள்ளார். குயில் கறி சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருந்த சிவாஜி லதா மங்கேஷ்கர் சொன்னதற்காக அன்றிலிருந்து குயில் கறி சாப்பிடுவதையே விட்டுவிட்டுவிட்டாராம்.

“தமிழ்இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Sivaji Ganesan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment