இந்திய சினிமாவில் நடிப்புக்கு பெயர் பெற்று நடிப்பு பல்கலைகழகம் என்று போற்றப்படும் சிவாஜி கணேசன், இன்றைய தலைமுறை நடிகர்களுக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்தாலும், அவரே வியந்து பாராட்டிய நடிகையும் தென்னிந்திய சினிமாவில் இருந்துள்ளார்.
நாடக நடிகராக இருந்து 1952-ம் ஆண்டு வெளியான பராசக்தி படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் சிவாஜி கணேசன். அதனை தொடர்ந்து பல வெற்றிப்படங்களை கொடுத்த, இவர், நடிப்புக்கு மிகச்சிறந்த உதாரணம் என்று, அண்ணா, உள்ளிட்ட மூத்த தலைவர்களிடம் பாராட்டுக்களை பெற்றுள்ளார். அதேபோல் தன் வாழ்நாளின் இறுதிவரை சினிமாவில் நடித்து வந்த சிவாஜி, கடைசி காலத்தில் கமல், ரஜினி, விஜய் உள்ளிட்ட நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் நடிப்பு பல்கலைகழகம் என்று பெயரேடுத்த சிவாஜி கணேசனே தன்னை விட, சிறப்பான நடிகை ஒருவர் இருக்கிறார். அவரை போல் யாராலும் நடிக்க முடியாது என்று நடிகை பானுமதிக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். 1950-களில சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் தான் பானுமதி. அப்போது ஹீரோவாக இருந்த நடிகர்கள் பலரும் பானுமதியுடன் ஒரு படத்திலாவது நடித்துவிட வேண்டும் என்ற விரும்பியுள்ளனர்.
இந்திய சினிமாவில் நடிகை, இயக்குனர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர், எடிட்டர் என பன்முக திறமை கொண்ட நடிகை என்று பெயரேடுத்த பானுமதி, தமிழில் பல படங்கில் நடித்துள்ளார். 1939-ம் ஆண்டு வெளியான வரா விக்ரயம் என்ற படத்தின் மூலம் அறிமுகமான பானுமதி அதே ஆண்டு வெளியான சந்தன தேவன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். எம்.ஜி.ஆருடன் அலிபாபாவும் 40 திருடர்களும், மதுரை வீரன், ராஜா தேசிங்கு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
கள்வனின் காதலி, ரங்கோண் ராதா ஆகிய சில படங்களில் பானுமதியுடன் இணைந்து நடித்துள்ள, சிவாஜி கணேசன், பானுமதி என்ற பெரிய நடிகையுடன் இணைந்து இந்த படங்கனளில் நடித்தேன் என்பது தான் எனக்கு பெருமை என்று சிவாஜி குறிப்பிட்டுள்ளார். பானுமதி மாதிரி ஒரு நடிகையை பார்க்கவே முடியாது. பேராற்றல் கொண்டவர் அவர். அவருடன் நடித்தது புது அனுபவம். அப்போது நான் சின்ன பையானாக இருந்தாலும் அவருடன் நடித்தேன் என்பது எனக்கு பெருமை என சிவாஜி தனது சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார்.
பானுமதியுடன் சேர்ந்து ஒரு படத்திலாவது நடித்துவிட வேண்டும் என்று ஆசைப்பட்ட ஜெமினி கணேசனுக்கு மிஸ்ஸியம்மா என்ற படத்தில் வாய்ப்பு கிடைத்தது. இதை ஆனந்தத்துடன் ஏற்றுக்கொண்ட ஜெமினி கணேசனுக்கு இறுதியில் ஏமாற்றமே மிஞ்சியது. அந்த படத்தின் தயாரிப்பாளர் சக்ரபாணிக்கும், பானுமதிக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக பானுமதி படத்தில் இருந்து விலகியதை தொடர்ந்து சாவித்ரி அந்த படத்தில் நடித்தார்.
இதனால் ஏமாற்றம் ஏற்பட்டாலும் 1956-ம் ஆண்டு சதாரம் என்ற படத்தின் மூலம் பானுமதியுடன் இணைந்து நடித்தார் ஜெமினி கணேசன். இந்த படம் வெளியான ஆண்டில் பானுமதி நடிப்பில் 6 படங்கள் வெளியானது. இதில், தாய்க்கு பின் தாரம், அலிபாபாவும் 40 திருடர்களும், மதுரை வீரன் உள்ளிட்ட படங்களில் எம்.ஜி.ஆருடனும், தெனாலி ராமன், ரங்கோன் ராதா ஆகிய 2 படங்களில் சிவாஜியுடன் இணைந்து நடித்திருந்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“