அவதார் 2 படத்திற்கு சிம்பு விமர்சனம்
உலக சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதில் ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூனுக்கு தனி இடம் உண்டு. இவர் இயக்கிய டெர்மினேட்டர் உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு மட்டுமல்லாமல் வசூலை வாரி குறித்தது. அந்த வகையில் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இவர் இயக்கிய அவதார் படம் நல்ல வரவேற்பை பெற்றது.
தொடர்ந்து இந்த படத்தின் 2-ம் பாகத்தை ஜேம்ஸ் கேமரூன் இயக்கியுள்ளார். இந்த படத்தின் டிரெய்லர் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், படம் அடுத்த வாரம் இந்தியாவில் வெளியாக உள்ளது. இதனிடையே தாய்லாந்தில் அவதார் 2 படம் பார்த்த சிம்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படத்தின் ஸ்டில்லை வெளியிட்டு கைதட்டுவது போன்ற எமோஜியை பதிவிட்டுள்ளார்.
கடும் சோகத்தில் நடிகை குஷ்பு
சினிமா அரசியல் என பிஸியாக இருந்து வரும் நடிகை குஷ்பு அவ்வப்போது சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார். இதனிடையே தற்போது அவர் வெளியிட்டுள்ள பதிவில், அவரது அண்ணன் கடந்த 4 நாட்களாக கடுமையான உடல்நலக்குறைவு காரணமாக ஐசியூவில் சிகிச்சை பெற்று வருவதாகவும், உயிருக்கு போராடி வரும் அவர் குணமடைய வேண்டும் என்று வேண்டிக்கொள்வதாக பதிவிட்டுள்ளார்.
விஜய்க்கு கதை சொன்ன அஜித் பட இயக்குனர்
வாரிசு படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு பிறகு லவ்டுடே படத்தின் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் விஜய் நடிப்பார் என்று கூறப்படும் நிலையில், அஜித்தின் வலிமை, நேர்கொண்ட பார்வை துணிவு உள்ளிட்ட படங்களை இயக்கிய எச்.வினோத் தற்போது விஜய்க்கு கதை கூறியுள்ளார். இந்த கதைக்கு விஜய் ஓகே சொல்லுவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
கதாநாயகர்களை நம்பி சினிமா இல்லை – அமீர்
ராம், பருத்தி வீரன் என இரண்டு மெகாஹிட் படங்களை கொடுத்த அமீது தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வரும் நிலையில், உயிர் தமிழுக்கு என்ற படத்தை இயக்கி நடித்துள்ளார். இது குறித்து அவர் அளித்த பேட்டியில், நான் எப்போதும் கதையின் நாயகனாகத்தான் இருப்பேன். சினிமாவுக்கு இயக்குனர்தான் முக்கியம். கதாநாயகர்களால் தான் சினிமா என்ற பிம்பத்தை உடைக்க விரும்புகிறேன் என கூறியுள்ளார்.
இயக்குனராகும் சிவகார்த்திகேயன்
தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகும் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், இந்த படத்தை அவரே இயக்க உள்ளதாகவும் உறுதி செய்துள்ளார். எனது வாழ்க்கை கதை திரைப்படமாக உள்ளது. இதில் எனது கேரக்டரில் சிவகார்த்திகேயன் நடிப்பார். அதோடு மட்டுமல்லாமல் படத்தை அவரே இயக்குவார் என்று கிரிக்கெட் வீரர் நடராஜன் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“