/indian-express-tamil/media/media_files/kzhnU5o48xIQw60REH32.jpg)
சிவகார்த்திகேயன்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயன் தயாரிப்பாளராகவுமு் நல்ல கதையம்சம் உள்ள படங்களை தயாரித்து வரும் நிலையில், விரைவில் அவர் இயக்குனர் அவதாரம் எடுக்க உள்ளதாகவும், அந்த படத்தில் சூரி நாயகனாக நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் தனது திறமையின் மூலம் முன்னணி நடிகராக உயர்ந்தவர் சிவகார்த்திகேயன். தொடர்ந்து பல வெற்றிப்படங்களை கொடுத்த இவர், கனா போன்ற நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தயாரித்து வருகிறார். அதேபோல் முன்னணி தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் படங்களிலும் நடித்து வருகிறார்
அந்த வகையில், தற்போது கமல்ஹாசனின், ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கும் அமரன் என்ற படத்தில் நடித்து வருகிறார். ராணுவ வீரர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அடுத்து ஏ.ஆர்,முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார்.
இதனிடையே காமெடி நடிகராக இருந்து வெற்றிமாறனின் விடுதலை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதையின் நாயகனாக அறிமுகமான சூரி, தற்போது கருடன் என்ற படத்தில் நாயகனாக நடித்துள்ளார். இந்த படம் வரும் மே 31-ந் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், சூரி அடுத்து கொட்டுக்காளி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்து வருகிறார்.
தற்போது கருடன் படத்தின் ப்ரமோஷன் பணிகளில் பிஸியாக இருக்கும் சூரி, சமீபத்தில் பங்கேற்ற நேர்காணல் ஒன்றில், சிவகார்த்திகேயன் இயக்கத்தில், தான் நாயகனாக நடிக்கும் படம் குறித்த கேள்விக்கு பதில் அளித்துள்ளார். இதில், “சிவகார்த்திகேயன் எனது சகோதரர் போன்றவர். நல்ல கதை இருக்கிறது, நீங்கள் செய்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னார். சரியான நேரத்தில் திட்டத்தை தொடங்குவோம் என்று முன்பே முடிவு செய்திருந்தோம்.
Confirmed ❤️
— Movie Tamil (@MovieTamil4) May 25, 2024
- #Sivakarthikeyan will make his directorial debut in Tamil cinema next
- #Soori Hero Confirmed 👍 #Amaran#SK23#SK24#SK25pic.twitter.com/v8YftcSi3W
அவருக்கு நேரம் கிடைக்கும்போது கதை முழுவதுமாக தயாராகிவிட்டால், அடுத்த கட்டத்தை தொடங்குவோம். அவர் இயக்கத்தில் நான் நடிப்பேன், அதற்காக நான் தயாராக இருக்கிறேன் என்று என்று கூறியுள்ளார். இந்த வீடியோ பதிவு தற்போது வைரலாகி வரும் நிலையில், சிவகார்த்திகேயன் இயக்கத்தில் சூரி நாயகன் கண்ஃபார்ம் என்று கூறி வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.