நடிகர் சூரி நாயகனக நடித்துள்ள கொட்டுக்காளி படத்தை தயாரித்துள்ள நடிகர் சிவகார்த்திகேயன், இந்த படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசியது நடிகர் தனுஷ் மறைமுகமாக பேசியுள்ளாரா என்ற கேள்வியை எழுப்பியள்ளது.
தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் முனனணி நடிகராக உயாந்தவர் சிவகார்த்திகேயன். திரைப்படங்களில் அவ்வப்போது சிறுசிறு வேடங்களில் நடித்த மெரினா படததின் மூலம் ஹீரோவாக அறிமுகமான சிவகார்த்திகேயன், தனுஷ் நடிப்பில் வெளியான 3 படத்தில் காமெடி ஆக்டராக நடித்திருந்தார். இந்த படம் தனுஷ்க்கு வெற்றிப்படமாக அமைந்த நிலையில், சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானர்.
அதனைத்தொடர்ந்து வருத்தப்படாத வாலிபர் சிங்கம், ரஜினி முருகன், காக்கிச்சட்டை, எதிர்நீச்சல் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை கொடுத்த இவர், தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக வலம் வருகிறார். நடிகராக மட்டுமல்லாமல், ஒரு தயாரிப்பாளராகவும் முத்திரை பதித்துள்ள சிவகார்த்திகேயன், கனா என்ற மெகாஹிட் படத்தை தயாரித்து வெற்றி கண்டார்.
அதன்பிறகு, நெல்சன் இயக்கத்தில் டாக்டர் படத்தை தயாரித்து நடித்த இவர், தற்போது கொட்டுக்காளி என்ற படத்தை தயாரித்துள்ளார். தமிழ் சினிமாவில் தற்போது ஹீரோவாக வலம் வரும் நடிகர் சூரி இந்த படத்தில் நாயகனாக நடித்துள்ளார். மலையாள நடிகை ஆனா பென் இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமவில் அறிமுகம் ஆகிறார். இந்த படம் ரசிகாகள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது
சென்னை ராயப்பேட்டை பகுதியில் நடைபெற்ற கொட்டுக்காளி படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய நடிகரும், தயாரிப்பாளருமான சிவகார்த்திகேயன், நான் யாரையும் கண்டுபிடிச்சி,இவருக் நான் தான் வாழ்க்கை கொடுத்தேன் என்ற சொல்லி காட்டமாட்டேன். ஏனென்றால் என்னை அப்படி சொல்லி சொல்லி பழக்கப்படுத்திவிட்டார்கள். நான் ஒருவரை அறிமுகம் செய்து வைத்தால் எனது நண்பா என்பது போன்றதான் அறிமுகம் செய்து வைப்பேன். அந்த மாதிரி சொல்லி காட்டும் ஆள் நான் இல்லை என்று கூறியுள்ளார்.
விஜய் டிவியின் தொகுப்பாளராக இருந்து ஒரு சில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த சிவகார்த்திகேயனை தனது 3 படத்தின் மூலம் அறிமுகம் செய்து வைத்த தனுஷ், அடுத்து அவரை வைத்து எதிர்நீச்சல் மற்றம் காக்கிச்சட்டை என இரு படங்களை தயாரித்து அவரக்கு வெற்றியை கொடுத்திருந்தார். தற்போது இருவருக்கும் இடையே மோதல் இருந்து வரும் நிலையில், சிவகார்த்திகேயன் தனுஷைதான் மறைமுகமாக சாடுகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“