உதவி அல்ல, என் கடமை: நெல் திருவிழாவில் சிவகார்த்திகேயன் உருக்கம்!

மக்களோடு மக்களாக இருந்த என்னை இப்படி மேடை ஏற்றி அழகு பார்க்கிறீர்கள். எனக்கு ரொம்ப ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு. இந்த விருதை கொடுத்ததுக்கு ரொம்ப மகிழ்ச்சி.

மக்களோடு மக்களாக இருந்த என்னை இப்படி மேடை ஏற்றி அழகு பார்க்கிறீர்கள். எனக்கு ரொம்ப ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு. இந்த விருதை கொடுத்ததுக்கு ரொம்ப மகிழ்ச்சி.

author-image
WebDesk
New Update
Sivakarthike

நடிகர் சிவகார்த்திகேயன்

Listen to this article
0.75x1x1.5x
00:00/ 00:00

திருவாரூர் மாவட்டம் திருத்துறைபூண்டி பகுதியில் நடைபெற்ற நெல் திருவிழாவில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் கலந்துகொண்டார். நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு இயக்கம் சார்பில் நடத்தப்பட்ட இந்த நெல் திருவிழாவில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் இளைஞர்கள் என பலரும் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.

இந்த நெல் திருவிழாவில் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன் கூறுகையில்,

Advertisment

மாபெரும் மனிதர்கள் நம்மாழ்வார் அய்யா அவங்க ஆரம்பித்து வைத்ததை நெல் ஜெயராமன் ஐயா ஒரு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தி சத்தம் இல்லாமல் ஒரு பெரிய சாதனையை செய்திருக்கிறார்கள். 174 பாரம்பரிய நெல் விதைகளை மீட்டு எடுத்து, இன்னைக்கு அது எல்லாரும் திரும்ப வந்து பயிர் செய்கிற மாதிரியான ஒரு சூழ்நிலை அவங்க ரெண்டு பேர் ஏற்படுத்தி இருக்காங்க. அவங்க ரெண்டு பேருக்கும் என்ன திருப்பி செஞ்சாலும் அது பத்தாதுன்னு நினைக்கிறேன்.

அப்போது நாம விதைக்கிறோம் அப்படின்னா அது நம்ம சாப்பிடுவதற்காக இருக்கும், நம்ம குடும்பம் சாப்பிடுவதற்காக இருக்கும், ஆனா அவங்க ரெண்டு பேரும் விதைத்திருக்கிற இந்த எண்ணம் இந்த திருவிழா இது எல்லாமே அடுத்து வர பல தலைமுறைகளுக்கானது. அதனால அவங்களுக்கு நம்ம இது செய்தோம் என்ற சொல்ல முடியாது எவ்வளவு செய்தாலும் அது பத்தாது என்ற தான் நினைக்கிறேன்

எனக்கு நெல் ஜெயராமன் ஐயா பத்தி ஃபர்ஸ்ட் சொன்னது இரா.சரவணன் அண்ணன் தான். நான் எதோ உதவி செய்தேன் அப்படின்னு சொன்னாங்க தயவு செய்து சொல்லவே சொல்லாதீங்க. அது என் கடமை அதுக்காக தான் ஆரம்பத்தில் சொல்லும் பொழுது அவர்களே இவ்ளோ செய்திருக்கிறார்கள். அதுக்கு நாம திருப்பி என்ன செஞ்சாலும் பத்தவே பத்தாது என்ற சொன்னேன். ஏதோ ஒன்னு சின்னதாவாது நான் திருப்பி செய்யுறது என் கடமையாக மட்டும்தான் பார்க்கிறேன்.

Advertisment
Advertisements

மக்களோடு மக்களாக இருந்த என்னை இப்படி மேடை ஏற்றி அழகு பார்க்கிறீர்கள். எனக்கு ரொம்ப ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு. இந்த விருதை கொடுத்ததுக்கு ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி. சில விருது மகிழ்ச்சியை கொடுக்கும், சில விருது சந்தோஷம் கொடுக்கும், சில விருது உங்களுக்கு புகழை கொடுக்கும். அப்படியான விருதாக இதை நான் பார்க்கிறேன். இந்த விருதுக்கு எவ்வளவு தகுதியானவன் எல்லாம் எனக்கு தெரியவில்லை. ஏன்னா ஒரு விவசாயி தன்னை மட்டும் பார்க்காமல் எந்த கஷ்டம் இருந்தாலும் வெளியே சொல்லிக் கொள்ளாமல் உழைக்கிறார். விவசாயி என்ற அந்த வார்த்தையே ரொம்ப பவர்ஃபுல்லான ஒரு வார்த்தை.

அந்த உழவர்களோட தோழன் என்ற இந்த விருதை நான் இன்னும் பெரிய பொறுப்பா பாக்குறேன். இதற்காக என்னால் இயன்றதை கடைசி வரைக்கும் ஏதாவது ஒரு வகையில் செய்வேன் என்பதை மட்டும் இந்த மேடையில் என்னால உறுதியாக சொல்ல முடியும். மருத்து கலக்காமல் விளைவித்த காய்கறிகள், உடம்புக்கு நல்லது என்பதை தாண்டி மனசுக்கு பெரிய நிம்மதியும் சந்தோஷத்தையும் கொடுக்குது.

கடந்த முறை இந்த திருவிழாவில் பங்பேற்ற சசிகுமார் சார், இந்த விழாவை தமிழகத்தின் பல ஊர்களில் நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். அதையே தான் நானும் கேட்டுக்கொள்கிறேன். இந்த நெல் திருவிழாவை தமிழகத்தில் பல பகுதிகளில் நடத்த வேண்டும். அங்கும் நான் வந்து கலந்துகொள்ள ஆசைப்படுகிறேன் என சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Sivakarthikeyan

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: