/indian-express-tamil/media/media_files/2025/03/14/5FtUYeypDWwYiEWfm4ny.jpg)
தமிழ் சினிமாவில் 50 ஆண்டுகளாக முன்னணி நடிகராக பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள நடிப்பில் வெளியான ஒரு படத்தில், நடிகர் சிவக்குமார் ரஜினிகாந்த் பேச வேண்டிய வசனத்தை திருத்தியுள்ளார்.
தமிழ் சினிமாவில், கமல்ஹாசன், ரஜினிகாந்த் நடிப்பில் பல வெற்றிப்படங்களை கொடுத்தவர் எஸ்.பி.முத்துராமன். இவரது இயக்கத்தில் கடந்த 1977-ம் ஆண்டு வெளியான படம் புவனா ஒரு கேள்விக்குறி. சிவக்குமார், ரஜினிகாந்த், சுமித்ரா, ஒய்.ஜி.மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். படத்திற்கு கதை எழுதிய பஞ்சு அருணாச்சலம் படத்திற்கான பாடல்களையும்எழுதியிருந்தார்.
ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றிருந்த இந்த படத்தில் ரஜினிகாந்த் பேசிய ஒரு வசனத்தை நடிகர் சிவக்குமார் திருத்தியுள்ளார் என்று நடிகர் சத்யராஜ், சூர்யா தொகுத்து வழங்கிய ஒரு நிகழ்ச்சியில் கூறியுள்ளார். அந்த நிகழ்ச்சியில் பேசிய சத்யராஜ், புவனா ஒரு கேள்விக்குறி படத்தில் ரஜினிகாந்தின் வசனத்தை சிவக்குமார் திருத்தியுள்ளார். அந்த படத்தில் நாகராஜ் நீ கடப்பாரையை முழுங்கிவிட்டு ஜீரணத்திற்காக சுக்கு கசாயம் சாப்பிடுற. கடப்பாரை ஜீரணம் ஆகாது வயிற்றை கிழித்துவிடும் என்பது தான் வசனம்.
இந்த வசனத்தை பேசிய நடிகர் ரஜினிகாந்த் தனக்கே உரிய பாணியில் ஸ்பீடாக பேசியுள்ளார். இதை கேட்ட சிவக்குமார் இவ்வளவு வேகமாக பேசினால் புரியாது. இது ரொம்ப நல்ல டைலாக். இப்படி பேச வேண்டும் என்று அவர் சொல்லி கொடுத்துள்ளார். இருவரும் பேசிய வசனத்தை சத்யராஜ் அந்த நிகழ்ச்சியில் பேசி காட்ட அங்கிருந்த அனைவரும் விழுந்து விழுந்து சிரிக்கின்றனர். இந்த வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.