தமிழ் சினிமாவில் பழம்பெரும் நடிகர்களில் முக்கியமானவர் சிவக்குமார். எம்.ஜி.ஆர் சிவாஜி, ஜெமினி கணேசன், முத்துராமன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுக்கு மத்தியில் களமிறங்கிய தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியவர். குறிப்பாக பக்தி படங்களில் முருகன் வேடத்தில் நடித்து பலரின் பாராட்டுக்களை பெற்றவர்.
ஹீரோவாகவும், தனது அடுத்த தலைமுறை நடிகர்கள் படங்களில் குணச்சித்திர நடிகராகவும் முத்திரை பதித்த சிவக்குமார் இதுவரை 190 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். அதேபோல் சின்னத்திரையில் அண்ணாமலை, சித்தி உள்ளிட்ட சீரியல்களில் நடித்து சின்னத்திரையிலும் முத்திரை பதித்த இவர், தற்போது திரைத்துறையில் இருந்து விலகி, ஓவியம் வரைவது, ஆன்மீகம் யோகா என தனது நேரத்தை செலவிட்டு வருகிறார்.
மேலும் தனது மகனும் நடிகருமான சூர்யா நடத்தி வரும் அகரம் பவுண்டேஷன் பணிகளிலும் ஈடுபட்டு வரும் சிவக்குமார், அதிக மதிப்பெண் பெற்று மேற்படிப்பு படிக்க வசதி இல்லாத பல குழந்தைகளுக்கு படிக்க உதவிகள் செய்து வருகிறார். இதனிடையே சமீபத்தில் அகரம் பவுண்டேஷன் நிகழ்ச்சியில் சிவக்குமார் கல்வி குறித்து பேசிய பேச்சு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அகரம் பவுண்டஷன் 44வது ஆண்டு விழா நிகழ்ச்சியில் பேசிய சிவக்குமார், நான் படித்த காலத்தில் காமராஜர் திட்டம் இல்லை. அதனால் கட்டணம் செலுத்தி தான் படிக்க வேண்டும். இதில் நான் ஒன்றாம் வகுப்பில் இருந்து பத்தாம் வகுப்பு வரை படிப்பதற்கு மொத்தமாகவே ரூ 850 தான் செலவானர். ஆனால் இப்போது ப்ரீகேஜி படிப்பதற்கே 2.5 லட்சம் ஆகிறது.
கார்த்தியின் மகன் ப்ரீகேஜி தான் படிக்கிறார். அங்கு எந்த படமும் சொல்லி கொடுக்க மாட்டார்கள். ஒன்னுக்கு... ரெண்டுக்கு தான் அழைத்து செல்வார்கள். இதற்க்கு இவ்வளவு பணமா? என பள்ளிகளின் கட்டடணம் குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“