/indian-express-tamil/media/media_files/2025/05/06/PPUHmAKVolKu3z1VkRMQ.jpg)
அந்த காலக்கட்டத்தில் நான் ஓவியம் வரைவதற்காக இந்தியா முழுவதும் பயணம் செய்ய ஆன தொகையை விட 2 மடங்கு இப்போது சூர்யா ஜோதிகா ஒரு வேளை சாப்பாட்டுக்கு செலவு செய்கிறார்கள் என்று நடிகர் சிவக்குமார் ஒரு நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் நடிப்பில் உச்சம் தொட்ட நடிகர்களில் ஒருவர் தான் சிவக்குமார். எம்.ஜி.ஆர் சிவாஜியுடன் நடித்த ஒரு சில நடிகர்களே தற்போது இருக்கிறார்கள். அதில் முக்கியமானவராக இருக்கும் சிவக்குமார், அடிப்படையில் ஒரு ஓவியர், பல அரசியல் தலைவர்களில் ஓவியங்களை வரைந்துள்ள இவர், எம்.ஜி.ஆர், சிவாஜி, உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து படங்களில் நடித்துள்ளார். சோலோ ஹீரோவாகவும் பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்.
1965-ம் ஆண்டு வெளியாக காக்கும் கரங்கள் என்ற படத்தில் தனது நடிப்பு பயணத்தை தொடங்கிய சிவக்குமார், கடைசியாக 1993-ம் ஆண்டு வெளியான பொறந்த வீடா புகுந்த வீடா என்ற படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். 2001-ம் ஆண்டு எழில் இயக்கத்தில் அஜித், ஜோதிகா இணைந்து நடித்த பூவெல்லாம் உன் வாசம் படம் தான் சிவக்குமார் கடைசியாக நடித்த தமிழ் படமாகும். சின்னத்திரையில், 2005-ம் ஆண்டு, அண்ணாமலை என்ற சீரியலில் நடித்திருந்தார். நல்ல வரவேற்பை பெற்ற இந்த சீரியலில் ராதிகா நாயகியாக நடித்திருந்தார்.
தற்போது ஓவியம் வரைவது, பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் சிவக்குமார், ரெட்நூல் யூடியூப் சேனலில் தான் வரைந்த ஓவியங்கள் மற்றும் தனது படிப்பு குறித்த அனுவங்களை பகிர்ந்துகொண்டுள்ளார். இதில் பேசிய அவர், பொண்ணு விளையும் பூமி என்ற ஒரு படம் வந்தது. அந்த படத்தில் நடித்த பத்மினியின் போட்டோ எனக்கு கிடைத்தது. அதை வைத்து அவரின் படத்தை வரைந்தேன். அதன்பிறகு கடந்த சில வருடங்களுக்கு முன்பு, பத்மினியின் சொந்தக்காரர் ஒருவருக்கு கல்யாணம் நடந்தபோது இந்த படத்தை அவரிடம் கொடுத்தேன்.
படத்தை பார்த்த அவர், இது நானா, இவ்வளவு அழகாகவா இருந்தேன் என்று ஆச்சரியமாக கேட்டார். இதை விட அழகாக இருந்தீங்க என்று நான் சொன்னேன். அப்போது இதை நான் வைத்துக்கொள்ளலாமா என்று கேட்டேன். உங்களுக்காகத்தான் எடுத்து வந்தேன் என்று சொல்லிவிட்டு, அவரிடம் கொடுத்துவிட்டு வந்தேன். 2006 செப்டம்பரில் சூர்யாவுக்கு கல்யாணம் நடந்தது. திருமணத்திற்கு வந்து மணமக்களை வாழ்த்திய பத்மினி அடுத்த சில நாட்களில் மரணமடைந்தார், அவர் உடல் வைக்கப்பட்ட பெட்டியில் தலையின் அருகில் நான் வரைந்த இந்த படம் இருந்தது.
நான் சென்னைக்கு வந்த புதிதில் குடியிருந்த வீட்டின் வாடகை ரூ15. அங்கிருந்து தான் 7 ஆண்டுகள் இந்தியா முழுவதும் சுற்றி ஓவியம் வரைவதற்கு ஆன செலவு மொத்தம் ரூ7500. ஆனால் இப்போது சூர்யா கார்த்தி குடும்பம் மதியம் ஹோட்டலில் போய் சாப்பிட்டால் ரூ15000 வருகிறது. .பைவ் ஸ்டார் ஹோட்டலில் ஒருவேளை சாப்பாடு இவ்வளவு செலவு ஆகிறது. ஆனால் நான் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை 7 ஆண்டுகள் தெருத்தெருவாக போய் ஓவியம் வரைய 7 ஆண்டுகள் ஆள செலவு ரூ7500 என்று சிவக்குமார் கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.