/indian-express-tamil/media/media_files/e8OA1I62O8NcDrQ5fEhU.jpg)
நடிகர் சூரி
மதுரையில் அம்மன் உணவகம் நடத்தி வரும் நடிகர் சூரி ஏற்கனவே 10 கிளைகள் வைத்துள்ள நிலையில், தற்போது திருப்பரங்குன்றம் பகுதியில் தனது 11-வது கிளையை திறந்துள்ளார். திரையுலகினர் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவில், ஓரிரு காட்சிகளில் நடித்து வெண்ணிலா கபடிக்குழு படத்தின் மூலம் பிரபலமானவர் சூரி. அதன்பிறகு, விஜய் அஜித், விக்ரம, சூர்யா, சிம்பு, தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களில் காமெடியில் கலக்கியவர் சூரி. குறிப்பாக விமலுடன் இவர் நடித்த தேசிங்கு ராஜா, சசிகுமாருடன் சுந்தரபாண்டியன் படத்திலும் 2-வது நாயகன் கேரக்டரில் நடித்திருந்தார்.
தற்போது ஹீரோவாக உயர்ந்துள்ள சூரி, வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை படத்தில் கதையின் நாயகனாக நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. தற்போது விடுதலை படத்தின் 2-ம் பாகம் தயாராகி வரும் நிலையில், சூரி கதையின் நாயகனாக நடித்த 2-வது படமான கருடன் சமீபத்தில் வெளியாகி அவருக்கு பெரிய வெற்றியை கொடுத்தது.
தற்போது கொட்டுக்காளி உள்ளிட்ட சில படங்களில் நாயகனாக நடித்து வருகிறார்.
நடிப்பு மட்டுமல்லாமல், சொந்த தொழிலில் ஆர்வம் காட்டி வரும் சூரி, மதுரை மாவட்டத்தில் அம்மன் உணவகம் என்ற பெயரில் ஹோட்டல் நடத்தி வருகிறார். அதேபோல் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் கேண்டீன் நடத்தி வரும் சூரி, தனது அம்மன் உணவகம் 10 கிளைகள் தொடங்கியிருந்த நிலையில், தற்போது மதுரையில் தனது 11-வது கிளையை தொடங்கியுள்ளார்.
மதுரை திருப்பரங்குன்றம் அருகே திருநகர் பகுதியில் தனது அம்மன் உணவகத்தின் புதிய கிளைகளை திறந்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ள நிலையில், ரசிகர்கள் சினிமா நட்சத்திரங்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.