Advertisment
Presenting Partner
Desktop GIF

யார் அழைத்தாலும் நடிக்க ரெடி : கருடன் வெற்றியை கொடுக்கும் ; சூரி நம்பிக்கை

கருடன் படத்தில் நடிகர் சசிகுமார் சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர். விடுதலைப் படத்தில் இருந்தது போலவே இந்த படத்திலும் சிறிது கஷ்டங்கள் அனுவித்தேன்.

author-image
WebDesk
New Update
actor soory

நடிகர் சூரி

வெற்றிமாறன் அளித்த கதாநாயகன் இடத்தை தக்க வைத்துக் கொள்ள விரும்புகிறேன். யார் கூப்பிட்டாலும் நடிக்க ரெடியாக இருக்கிறேன். அதே சமயம் இயக்குனர் வெற்றிமாறன் பார்வையிலே இருப்பேன் என நடிகர் சூரி கோவையில் அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

இயக்குனர் துரை செந்தில் இயக்கத்தில் நடிகர் சூரி நடிப்பில் உருவாகியுள்ள கருடன் திரைப்படம் 31"ம் தேதி  திரைக்கு வரவுள்ளது. இதனிடையே நடிகர் சூரி கோவை ப்ரோசோன் மாலில் கருடன் படம் குறித்து செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், காமெடியனாக பார்க்கப்பட்ட சூரி விடுதலை திரைப்படத்திற்கு பிறகு வேறு மாதிரியான ஒரு ஜானரில் இருந்திருப்பேன் அதே போல் இந்தப் படத்தில் வேறு ஒரு பரிணாமத்தில் இருந்திருப்பேன் என நம்புகிறேன். கதாநாயகனாகவே தற்போது எனக்கு வாய்ப்புகள் வந்துகொண்டு இருக்கிறது. ஆனால் காமெடியனாக வாய்ப்புகள் வரவில்லை.

கருடன் படத்தில் நடிகர் சசிகுமார் சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர். விடுதலைப் படத்தில் இருந்தது போலவே இந்த படத்திலும் சிறிது கஷ்டங்கள் அனுவித்தேன். அதற்கான பலன் நிச்சயமாக கிடைக்கும் என நம்புகிறேன்.காமெடி கதாபாத்திரங்களை நடிக்கும் போது அதற்கான காட்சிகளை மட்டும் நடித்துவிட்டு சென்று சென்றுவிடுவேன். தற்பொழுது கதாநாயகனாக நடிக்கின்ற போது மிகப்பெரிய பொறுப்புணர்ச்சி இருப்பதாக உணர்கிறேன்.

கதாநாயகனாக வெற்றிமாறன் அளித்த இடத்தை தக்க வைத்துக் கொள்வதற்கு மெனக்கெட வேண்டி உள்ளது. நான் கடந்து வந்த பாதையை நினைத்து பெருமை கொள்கிறேன். மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. வெற்றிமாறன் இந்த திரைப்படத்தை பார்த்துவிட்டு மிகவும் நன்றாக இருப்பதாகவும் எனக்கு இன்னொரு விடுதலை படமாக இது அமையக்கூடும் என்று கூறியுள்ளார்.

விடுதலை திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரத்தின் கதாநாயகனாக இருந்த நிலையில் அதிலிருந்து வெளியில் வரும் போது எனக்கு ஒரு மாஸ் என்ட்ரி வைத்து விட்டால் ஒரு பக்கம் தான் தனது வண்டியை விட வேண்டும். சினிமாவில் எப்பொழுதும் காலி என்பதே இருக்காது. அந்தந்த இடத்திற்கு ஆட்கள் வந்து கொண்டே இருப்பார்கள். மேலும் சினிமா அந்த இடத்திற்கு ஒரு ஆளை தேர்வு செய்து விடும். நான் கதாநாயகனாக நடிக்கும் பொழுது யார் காமெடியன் கதாபாத்திரத்திற்கு சரியாக இருப்பார்களோ அவர்களை கட்டாயமாக தேர்வு செய்வேன். வறுமைக்கோட்டில் உள்ள காமெடி நடிகர்கள் அனைவரும் தங்களால் இயன்ற உதவிகளை அவர்களுக்கு செய்து வருகிறார்கள்.

சில சமயங்களில் இயற்கை காரணங்களிலினால் மரணிப்பது வேதனை அளிக்கிறது. எந்த இயக்குனர் அழைத்தாலும் நடிப்பதற்கு தயாராக இருக்கிறேன். புதிய இயக்குனர்கள் கூட உலக அளவில் திரும்பி பார்க்கின்ற அளவிற்கு படங்களை எடுத்து வருகின்றனர். இயக்குனர் தான் என்னை உலக அளவில் கொண்டு சென்றுள்ளனர். தல தளபதி கவின் மணிகண்டன் என்று எதிர் எதிர் நாயகர்கள் இருப்பதைப் போல் சூரி சந்தானம் என்று எடுத்துக் கொள்ளலாமா என்று கேள்வி எழுப்பியதற்கு உங்களுடைய பார்வையில் எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம் எனவும் சூரிக்கு சூரி தான் என பதில் அளித்தார்.

பி.ரஹ்மான் கோவை மாவட்டம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Soori
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment