போதைப்பொருள் விவகாரம்: நடிகர் ஸ்ரீகாந்த் அதிரடி கைது

போதைப் பொருள் பயன்பாடு தொடர்பான வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ளார். அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத்திடம் இருந்து போதைப்பொருள் வாங்கியது உறுதி செய்யப்பட்டுள்ளது.

போதைப் பொருள் பயன்பாடு தொடர்பான வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ளார். அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத்திடம் இருந்து போதைப்பொருள் வாங்கியது உறுதி செய்யப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Srikanth12

போதைப்பொருள் விவகாரம்: நடிகர் ஸ்ரீகாந்த் அதிரடி கைது

ரோஜா கூட்டம் என்ற படத்தின் மூலம் 2002 ஆம் ஆண்டு கதாநாயகனாக அறிமுகமானார் நடிகர் ஸ்ரீகாந்த். அதை தொடர்ந்து ஏப்ரல் மாதம், மனசெல்லாம், பார்த்திபன் கனவு, நண்பன் போன்ற வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவரது நடிப்பில் தினசரி மற்றும் கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல் திரைப்படங்கள் வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது.

Advertisment

இந்நிலையில் ஸ்ரீகாந்திற்கு போதைப்பொருள் சப்ளை செய்ததாக அதிமுக எக்ஸ் எம்.எலே பிரசாத் வாக்குமூலம் கொடுக்க அதன் அடிப்படையில் ஸ்ரீகாந்திடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அவரது ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டதில் அவர் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டது.

அதிமுக முன்னாள் பிரமுகர் பிரசாத்திடம் நடிகர் ஸ்ரீகாந்த் ஒரு கிராம் ரூ. 12,000 -க்கு வாங்கி 40 முறை போதைப்பொருள் பயன்படுத்தியதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஸ்ரீகாந்த் ரூ. 72,000 ஆன்லைன் பணப்பரிவர்த்தனை செய்துள்ள ஆதாரங்கள் உள்ளன. இந்நிலையில் நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதியான நிலையில் அவர் காவல்துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டு உள்ளார். பிரதீப் அளித்த தகவலின் அடிப்படையில், மேலும் சில நடிகர்களிடம் போலீசார் விசாரணை நடத்தவுள்ளனர்.

Tamil Cinema News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: