நீங்க நடிச்சா அது கேரக்டர்; ஆனா நான் நடிக்க முடியாது: கமல் படத்தை நிராகரித்த அருணாச்சலம் நடிகர்!

அருணாச்சலம் படத்தில் படத்தில், ரஜினிகாந்தை மிரட்டும் வகையில் நடித்திருந்தவர் தான் நடிகர் சுப்புணி.

அருணாச்சலம் படத்தில் படத்தில், ரஜினிகாந்தை மிரட்டும் வகையில் நடித்திருந்தவர் தான் நடிகர் சுப்புணி.

author-image
WebDesk
New Update
Supini Actor

அருணாச்சலம் படத்தில் ரஜினிகாந்திடம் சேட்டை செய்யும் கேரக்டரில் நடித்து ரசிகர்கள் கவனத்தை ஈர்த்த நடிகர் சுப்புணி, கமல்ஹாசன், நடிப்பில் வெளியான ஒரு படத்தில் நடிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார். ரஜினிக்கு ஓகே சொன்ன இவர், கமல்ஹாசனுடன் நடிக்க மாட்டேன் என்று சொன்னதற்கு காரணம் என்ன என்பது குறித்த ஒரு நேர்காணலில் கூறியுள்ளார்.

Advertisment

தமிழ் சினிமாவில் காமெடி இயக்குனர் என்று பெயரேடுத்துள்ள சுந்தர்.சி இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த படம் அருணாச்சலம். 1997-ம் ஆண்டு வெளியான இந்த படத்திற்கு கிரேஸி மோகன் வசனம் எழுதியிருந்தார். ரஜினிகாந்துடன் சௌந்தர்யா, ஜெய்சங்கர், மனோரமா, வடிவுக்காரசி, செந்தில், ஜனகராஜ், விசு, ரகுவரன், நிழல்கள் ரவி, வி.கே.ராமசாமி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். தேவா இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார்.

1997-ம் ஆண்டு தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது. முதல் பாதி காமெடி 2-வது பாதி காமெடியுடன் ஆக்ஷன் என அமைக்கப்பட்டிருந்த இந்த படத்தில், ரஜினிகாந்தை மிரட்டும் வகையில் நடித்திருந்தவர் தான் நடிகர் சுப்புணி. மாப்பிள்ளை வீட்டுக்காரன என்று அவர் ரஜினிகாந்திடம் செய்யும் அலப்பறைகள் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்திற்கு முன்னதாக சிவாஜியுடன் கூட சுப்புணி நடித்துள்ளார்.

சிவாஜியுடன் பரிட்சைக்கு நேரமாச்சு என்ற படத்தில் அவர் நடித்திருந்தாலும், அவருக்கு பிரேக் கொடுத்த படம் அருணாச்சலம் தான். ஆனால் இந்த படத்திற்கு பிறகு அவர், வேறு படங்களில் நடிக்கவில்லை. அதேசமயம் அருணாச்சலம் படத்திற்கு முன்னதாக கமல்ஹாசனின், அபூர்வ சகோதரர்கள் படத்தில் நடிக்க சுப்புணிக்கு அழைப்பு வந்துள்ளது. ஆனால் அவர் நடிக்க மறுத்துள்ளார். ஏன் கமல்ஹாசன் படத்தில் நடிக்கவில்லை என்பது குறித்து அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

Advertisment
Advertisements

6 வயதிலேயே நான் நடிக்க தொடங்கிவிட்டேன். நடிக்க வந்து 50 ஆண்டுகள் கடந்துவிட்டது. பல மேடை நாடகங்களில் நடித்து இருக்கிறேன். உலகம் முழுவதும் பல நாடுகளுக்கு சென்று நடித்துள்ளேன். நான் வேலை செய்த நிறுவனத்தில் முதலாளி ரொம்ப நல்லவர். நாடகங்களுக்காக பல நாட்கள் லீவு எடுத்திருக்கிறேன். ஆனால் அவர் கோபப்பட்டதே இல்லை. நாடகங்களுக்கு லீவு போடுவது போக அதிகமாக லீவு போட்டால் அது சரியாக இருக்காது என்பதால், படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டேன்.

அருணாசலம் படத்தில் கிரேஸி மோகன் தான் வசனம் எழுதினார். அவருக்கும் எனக்கும் நெருங்கிய நட்பு இருக்கிறது. அவர் தான் அந்த படத்தில் நடிக்க ரஜினி சார் என்னை அழைப்பதாக சொன்னார். நான் அலுவலக பணி காரணமாக முடியாது என்று சொன்னேன். ஆனால் அவர் வற்புறுத்தி கேட்டதால் நடிக்க ஒப்புக்கொண்டேன். அந்த படம் எனக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்று தந்தது. அதற்கு முன்பே அபூர்வ சகோதரர்கள் படத்தில் நடிக்க அழைத்தார்கள். முடியாது என்று சொல்லிவிட்டேன்.

மௌலி, கஎன அனைவரும் அங்கு இருந்தார்கள். படத்தில் அப்பு கமலுடன் வருவது போன்ற கேரக்டர். ஆனால் என் உயரம் காரணமாக கிடைக்கும் எந்த வாய்ப்பும் எனக்கு தேவையில்லை என்று சொல்லி நடிக்க முடியாது என்ற சொல்லிவிட்டேன். நான் நடிக்கிறேன் என்று கமல் சொன்னார். நீங்கள் நடிப்பது கேரக்டர். ஆனால் என்னால் நடிக்க முடியாது என்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன். அதன்பிறகு மர்மயோகி படத்திற்காக தாடி வளர்க்க சொன்னார். ஆனால் அந்த படம் கைவிடப்பட்டது என்று சுப்புணி கூறியுள்ளார். 

Tamil Cinema News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: