/indian-express-tamil/media/media_files/IWpiJ07wxV4em4Bsd4UV.jpg)
நடிகர் சூர்யா - கார்த்தி
96 படத்தின் இயக்குனர் பிரேம் குமார் இயக்கத்தில் கார்த்தி நடித்து வரும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ள நிலையில், படத்திற்கு மெய்யழகன் என்று பெயரிட்டுள்ளனர். இந்த போஸ்டரை நடிகர் சூர்யா தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக கார்த்தி அடுத்தடுத்து பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்த வகையில், 96 படத்தின் மூலம் இளைஞர்கள் மத்தியில் கவனம் ஈர்த்த இயக்குனர் பிரேம் குமார் இயக்கத்தில் கார்த்தி ஒரு படத்தில் நடித்து வருகிறார். சூர்யா – ஜோதிகா இருவரும் தங்களது 2டி எண்டெய்ண்மெண்ட் நிறுவனத்தின் மூலம் இந்த படத்தை தயாரித்து வருகின்றனர்.
இந்த படத்தில் நடிகர் அரவிந்த் சுவாமி முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். இந்த படம் குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில் நடிகர் கார்த்தியின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டது. படத்திற்கு மெய்யழகன் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படம் குறித்து அறிவிப்பு வெளியிடும் வகையில் படக்குழு 2 போஸ்டர்களை வெளியிட்டுள்ளனர்.
‘இதில் ஒரு போஸ்டரில் நடிகர் கார்த்தி காளை மாட்டுடன் பாசமாக பழகுவது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் 2-வது போஸ்டரில், படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் நடிகர் அரவிந்த் சுவாமி சைக்கிள் ஓட்ட, பின்னால் கார்த்தி வித்தியாசமாக அமர்ந்து செல்கிறார். இந்த இரு போஸ்டர்களும் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்து வரும் நிலையில், படத்தின் டைட்டிலான மெய்யழகன் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.
.@Karthi_Offl Happy bday! Always love it when you give back to make good cinema!! #Meiyazhagan#மெய்யழகன்pic.twitter.com/wkbxMKKda9
— Suriya Sivakumar (@Suriya_offl) May 24, 2024
ஏற்கனவே கார்த்தி நடிப்பில் கடைக்குட்டி சிங்கம், மற்றும் விருமன் ஆகிய படங்களை தயாரித்த நடிகர் சூர்யா – ஜோதிகா தற்போது 3-வது முறையாக இந்த படத்தில் இணைந்துள்ளனர். தற்போது மெய்யழகன் போஸ்டரை சூர்ய தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.