கோப்பை வென்ற மகள் தியா... பெருமையுடன் சூர்யா - ஜோதிகா : வைரல் பதிவு

இந்தி பட வாய்ப்புக்காக சூர்ய தனது மனைவி ஜோதிகா மற்றும் குழந்தைகளுடன் மும்பையில் செட்டில் ஆகியுள்ளார்.

இந்தி பட வாய்ப்புக்காக சூர்ய தனது மனைவி ஜோதிகா மற்றும் குழந்தைகளுடன் மும்பையில் செட்டில் ஆகியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Surya and Jyothika Movie

சூர்ய - ஜோதிகா மகள்

பள்ளியின் ஸ்போர்ட்ஸ் டே விழாவில் தனது மகள் வாங்கிய கோப்பையுடன் நடிகை ஜோதிகா வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சூர்யா. கடைசியாக எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்திருந்த இவர், தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா என்ற வரலாற்று படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்து சூரரைப்போற்று படத்தை இயக்கிய சுதா கொங்காரா இயக்கத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. வெற்றிமாறன் இயக்கத்தில் வாடி வாசல் படத்திலும் சூர்யா நடிக்க உள்ளார்.

சூர்யாவின் மனைவி ஜோதிகாவும், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்த நிலையில், தற்போது சினிமாவில் முக்கிய கேரக்டர்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் மலையாளத்தில் வெளியான காதல் திகோர் திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. இதனிடையே இந்தி பட வாய்ப்புக்காக சூர்ய தனது மனைவி ஜோதிகா மற்றும் குழந்தைகளுடன் மும்பையில் செட்டில் ஆகியுள்ளார்.

Advertisment
Advertisements

சூர்யாவின் மகள் தியா மகன் தேவ் ஆகியோர் மும்பை பள்ளியில் படித்து வரும் நிலையில், அங்கு ஸ்போர்ட்ஸ் டே நடைபெற்றுள்ளது. இதில் தியா தனது அணியுடன் ஸ்டோர்ஸ்டே கோப்பை வென்றுள்ள நிலையில், இது குறித்த வீடியோ பதிவை ஜோதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தனது மகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ள ஜோதிகா, உங்கள் இருவரால் எங்களுக்கு பெருமை என்று பதிவிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், சூர்யா மற்றும் ஜோதிகா ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

actor surya Jyothika

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: