தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சூர்யா. வசந்த இயக்கத்தில் தயரான நேருக்கு நேர் படத்தில் விஜயுடன் இணைந்து நடிக்க ஒப்பந்தமாகியிருந்த நடிகர் அஜித் திடீரென படத்தில் இருந்து விலகியதை தொடர்ந்து, அவருக்கு பதிலாக நேருக்கு நேர் படத்தில் நடிக்க வந்தவர் தான் சூர்யா. இந்த படம் வெற்றி பெற்றிருந்தாலும், சூர்யாவுக்கு நடிக்க தெரியவில்லை என்று கடுமையாக விமர்சனங்கள் எழுந்துது.
பழம்பெரும் நடிகர் சிவகுமாரின் மகனான சூர்யா, தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருந்தாலும், தனக்கான இடத்தை உருவாக்க, ஆரம்பத்தில் சூர்யா பல போராட்டங்களை சந்தித்துள்ளார். 1999-ம் ஆண்டு விஜகாந்துடன் இணைந்து பெரியண்ணா படத்தில் நடித்த இவர், அடுத்து 2001-ம் ஆண்டு விஜயுடன் இணைந்து ப்ரண்ட்ஸ் என்ற படத்தில் நடித்திருந்தார். அதே ஆண்டு பாலா இயக்கத்தில் வெளியா நந்தா திரைப்படம் சூர்யாவுக்கு பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.
அதன்பிறகு 2003-ம் ஆண்டு கௌதம் மேனன் இயக்கிய 'காக்கா காக்கா' சூர்யாவுக்கு பெரிய வெற்றியை கொடுத்த படமாக அமைந்தது. அதன்பிறகு தனது திறமைகளை வளர்த்துக் கொள்ளத் தொடங்கிய சூர்யா, படங்களைத் தேர்ந்தெடுப்பதில் அதிக ஆர்வம் காட்டினார். பன்முகத்தன்மை வாய்ந்த கேரக்டர்கள் மற்றும் சுவாரஸ்யமான கேரக்டர்களை தேர்வு செய்து நடிக்க தொடங்கினார். மேலும் 2010 ஆம் ஆண்டில் அவர் தனது தலைமுறை நடிகர்களில் உச்சத்தில் இருந்தார்.
அடுத்தடுத்து சூர்யாவுக்கு வெற்றிப்படங்கள் வர தொடங்கிய நிலையில், அவரது ரசிகர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்ததது. இதன் காரணமாக அவரது சம்பளமும் அதிகரித்தது. மறுபக்கம். தனிப்பட்ட வீடுகள் மற்றும் ஆடம்பர கார்கள் முதல் திரைப்படங்களை தயாரிப்பது வரை சூர்யா தனது நிதி சாம்ராஜ்யத்தை உருவாக்கத் தொடங்கினார். சூர்யா சமீபத்தில் மும்பையில் ரூ 70 கோடி மதிப்புள்ள சொகுசு பிளாட் ஒன்றை வாங்கினார்.
மேலும் அவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் மும்பைக்கு குடியேறியுள்ளார். மேலும், அவரது மனைவி ஜோதிகாவும் தனது திரைப்படங்கள் மூலம் நன்றாக சம்பாதித்து வருவதால் அவருக்கு பெரும் ஆதரவை பெற்று வருகிறார். சூர்யாவின் நிகர சொத்து மதிப்பு சுமார் 350 கோடி ரூபாய் என ஃபிலிமிபீட் தெரிவித்துள்ளது. இதில் சென்னை, மும்பையில் உள்ள வீடு மற்றும் அவரது மூன்று வெவ்வேறு சொகுசு கார்களும் அடங்கும். சூர்யா தனது பேனரில் சில சுவாரஸ்யமான படங்களையும் தயாரிப்பதால், பிரபல தென்னக நடிகரின் நிகர சொத்து மதிப்பு வரும் ஆண்டுகளில் உயரும் என்று கூறப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“