வருஷம் ஆனால் ரூ10 லட்சம்; ஸ்டண்ட் கலைஞர்களை கைவிடாத நடிகர் சூர்யா: ஸ்டண்ட் சில்வா தகவல்!

பா.ரஞ்சித் இயக்கி வரும் வேட்டுவம் திரைப்படத்தின் ஷூட்டிங்கில் சண்டைக்காட்சியின் போது ஸ்டண்ட் கலைஞர் மோகன்ராஜ் என்பவர் மரணமடைந்தது திரைத்துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பா.ரஞ்சித் இயக்கி வரும் வேட்டுவம் திரைப்படத்தின் ஷூட்டிங்கில் சண்டைக்காட்சியின் போது ஸ்டண்ட் கலைஞர் மோகன்ராஜ் என்பவர் மரணமடைந்தது திரைத்துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

author-image
WebDesk
New Update
retro Movie surya

சமீபத்தில் பா.ரஞ்சித்தின் படப்பிடிப்பில் ஸ்டண்ட் கலைஞர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஸ்டண்ட் கலைஞர்களுக்கு இன்சூரன்ஸ் தேவை என்ற கோரிக்கை வலுவாக எழுந்து வருகிறது. இதனிடையே, ஸ்டண்ட் கலைஞர்களுக்கு கடந்த பத்து ஆண்டுகளாக நடிகர் செய்துவரும் உதவி கள் குறித்து சண்டை பயிற்சியாளர் ஸ்டண்ட் சில்வா கூறியுள்ளார்.

Advertisment

சினிமா துறையில் மிகவும் ஆபத்தான பணிகளை மேற்கொண்டு வருபவர்கள் ஸ்டண்ட் கலைஞர்கள். கவனமாக இல்லை என்றால் உயிர் போகும் நிலை கூட ஏற்படும். இதனால் ஸ்ட்ணட் கலைஞர்களுக்கு ரஜினிகாந்த் முதல் கமல்ஹாசன் வரை அனைத்து நடிகர்களும் பெரிய மரியாதை கொடுத்து வருகின்றனர். அதே சமயம்,  அவர்களின் பாதுகாப்புக்கும், படப்பிடிப்பின்போது உயிரிழந்தால், அவர்களின் குடும்பத்திற்கும் செய்யும் உதவிகள் என்பது போதுமானதாக இல்லை என்றும் கூறப்படுகிறது.

இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு, பா.ரஞ்சித் இயக்கி வரும் வேட்டுவம் திரைப்படத்தின் ஷூட்டிங்கில் சண்டைக்காட்சியின் போது ஸ்டண்ட் கலைஞர் மோகன்ராஜ் என்பவர் மரணமடைந்தது திரைத்துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தில் உயிர் போனதற்கு காரணமே தயாரிப்பு நிறுவனத்தின் அலச்சியம் தான் என்றும் கூறி வருகின்றனர். 

இந்த படத்தின் தயாரிப்பாளர் பா.ரஞ்சித் தான். இதனால் அவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், ஸ்டண்ட் கலைஞர்களுக்கு இன்சூரன்ஸ் தேவை என்ற கோரிக்கையும் வலுவாக எழுந்துள்ளது. இது குறித்து பிரபல சண்டை பயிற்சியாளரான "ஸ்டண்ட் சில்வா அளித்த பேட்டியில், நடிகர் சூர்யா ஏற்கனவே அகரம் ஃபவுண்டேஷனை வைத்து உதவி செய்துவருகிறார். அதேபோல், கடந்த 10 ஆண்டுகளாக ஸ்டண்ட் கலைஞர்களுக்கு இன்சூரன்ஸ் தொகை செலுத்திவருகிறார்.

Advertisment
Advertisements

ஆண்டு தொடங்கினால், பத்து லட்சம் ரூபாய் கட்டுவார். அதனைப் பார்த்து நான் வியந்துபோனேன். ஆனால் எந்த நிகழ்ச்சியிலும் அவர் இதுகுறித்து வெளிப்படையாக சொன்னதில்லை. அவர் கட்டியபிறகு அனைத்து கம்பெனிகளிலும் அது வழக்கமாக மாறிவிட்டது என்று கூறியுள்ளார். மோகன் ராஜின் உயிரிழப்பு தமிழ் திரையுலகம் மட்டுமின்றி மற்ற திரையுலகத்திலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் இந்திய திரைத்துறையை சேர்ந்த 650 சண்டை கலைஞர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டத்தை ஏற்பாடு செய்துள்ளார். இதன் மூலம் 5 லட்சம் ரூபாய்வரை இலவச மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Surya actor surya

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: