/indian-express-tamil/media/media_files/2025/05/03/7dY29r7kBdyoTqeeLdGT.jpg)
நடிகர் சூர்யா வீட்டில் பணியாற்றி வந்த சுலோச்சனா என்ற பெண் சூர்யாவின் பாதுகாவலரிடம் ரூ.42 லட்சம் மோசடி செய்த வழக்கில் குடும்பத்துடன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுததியு்ளது.
இணையதள பயன்பாடு அதிகரித்து வரும் இன்றைய காலக்கட்டத்தில் பலர் மோசடி சம்பவங்களில் ஈடுபடுவதும், இதனால் பலர் தங்கள் பணத்தை பறிகொடுப்பது நாளுக்க நாள் அதிகரித்து வருகிறது. இது குறித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்ற அரசு மற்றும் காவல்துறை தரப்பில் கூறப்பட்டு வந்தாலும், நாளுக்கு நாள் மோசடி சம்பவங்கள் அதிகரித்து வருவது தொடர்கதையாகி வருகிறது. அந்த வரிசையில் தற்போது நடிகர் சூர்யாவின் தனி பாதுகாவலர் மோசடி வலையில் சிக்கியுள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா தற்போது ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் கறுப்பு என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது. இதனைத்தொடர்ந்து சூர்யா அடுத்து ஒரு தெலுங்கு இயக்குனரின் படத்தில் நடித்து வரும் நிலையில், தனது அகரம் அறக்கட்டளை மூலம் ஏராளமான சமூக சேவைகளையும் செய்து வருகிறார். இதனிடையே, சூர்யாவிடம், தனி பாதுகாவலராக பணியாற்றி வரும் அந்தோணி என்பவர் மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்த புகாரில். சூர்யாவின் வீட்டில் பணியாற்றி வந்த சுலோச்சனா என்ற பெண், அவரின் மகன்கள் பாலாஜி, பாஸ்கர், சகோதரி விஜயலட்சுமி ஆகிய 4 பேர் குறைந்த விலையில் தங்கம் வாங்கி தருவதாக ரூ.42 லட்சம் மோசடி செய்துள்ளனர் என்று கூறியிருந்தார். இது தொடர்பான மாம்பலம் காவல்துறையினரால் அவர்கள் 4 பேரையும் கைது செய்துள்ள நிலையில், விசாரணையில, இந்த மோசடிக்கு மூளையாக செயல்பட்டது சுலோச்சனா தான் என்பது தெரியவந்துள்ளது. அவருக்கு குடும்பத்தினரும் உதவி செய்துள்ளனர்.
மேலும் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர்கள் ரூ.2.5 கோடி அளவுக்கு மோசடி செய்ததும், இதே பாணியில் அவர்கள் பலரிடம் மோசடி செய்துள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது. அவர்களை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில், இவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் யார், யார் என்பதை விசாரித்து வரும் காவல்துறையினர், அவர்களிடம் இருந்து பணம் பறிமுதல் செய்வது தொடர்பாகவும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.