சிவா படம் மாதிரியே இல்ல..  ஹாலிவுட் படம்: கங்குவா குறித்து ரசிகர்கள் உற்சாகம்!

Kanguva Movie Review and Release Updates: சூர்யா நடிப்பில் இன்று (நவம்பர் 14) வெளியாகியுள்ள கங்குவா படம் குறித்து ரசிகர்கள் தங்கள் விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
kanguva

Kanguva Movie Review and Release Updates: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும் தயாரிப்பாளராகவும் இருக்கும் சூர்யா நடிப்பில், அதிக பொருட்செலவில் தயாராகியுள்ள படம் கங்குவா. சிறுத்தை சிவா இயக்கியுள்ள இந்த படத்தில், பாலிவுட் நடிகை திஷா பதானி, பாபி தியோல் ஆகியோருடன், நட்டி நட்ராஜ், ஜெகபதி பாபு, கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தேவிஸ்ரீ பிரசாத் இந்த படத்தை ஸ்டூயோகிரீன் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார்.

Advertisment

கங்குவா படம் கடந்த அக்டோபர் 10-ந் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், அப்போது ரஜினிகாந்தின் வேட்டையன் படம் வெளியானதால் தள்ளிப்போனதை தொடர்ந்து, தற்போது நவம்பர் 14-ந் தேதி வெளியாகி உள்ளது. தற்போது தமிழக அரசின் சார்பில் சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், காலை 9 மணிக்கு படம் வெளியாகியுள்ளது.  

  • Nov 14, 2024 13:28 IST

    சிவா படம் மாதிரியே இல்ல..  ஹாலிவுட் படம்: கங்குவா குறித்து ரசிகர்கள் உற்சாகம்!

    சென்னை கோயம்பேடு ரோகிணி திரையரங்கில் ‘கங்குவா’ முதல் காட்சியை பார்த்த ரசிகர்கள் “சிவா படம் மாதிரியே இல்ல..  ஹாலிவுட் படம் பார்த்த மாதிரி இருக்கு” என்று உற்சாகமாக கூறியுள்ளனர்.



  • Nov 14, 2024 13:06 IST

    கங்குவா படம் தயாரிப்பில் ஒரு வரலாறு: ஒரு ரசிகனின் கமெண்ட்!

    கங்குவா படம் தயாரிப்பில் ஒரு வரலாறு ! சூர்யாவின் அட்டகாசமான நடிப்பு, காவிய காட்சிகள் மற்றும் கற்பனை கதை சொல்லல் ஆகியவை இந்திய சினிமாவை புதிய உயரத்திற்கு கொண்டு செல்கின்றன. வாழ்க்கையை விட பெரிய அனுபவத்தை விரும்பும் அனைத்து கனவு காண்பவர்களுக்கும் இந்த படம் என்று ஒருவர் பதிவிட்டுள்ளார்.



  • Advertisment
    Advertisements
  • Nov 14, 2024 13:04 IST

    கங்குவா படம் எப்படி இருக்கு?



  • Nov 14, 2024 12:17 IST

    கங்குவா வெற்றி - 'ரொம்ப ரொம்ப சந்தோசமாக இருக்கு': இயக்குநர் சிவா பேச்சு 

    "ரொம்ப ரொம்ப சந்தோசமாக இருக்கு. அமெரிக்கால இருந்து நண்பர்கள் கால் பண்ணாங்க. மிகப்பெரிய வெற்றிப் படம்ன்னு சொல்லுறாங்க. ரொம்ப திருப்தியா இருக்கு" என்று கங்குவா படத்தின் இயக்குனர் சிவா கூறியுள்ளார். 



  • Nov 14, 2024 10:58 IST

    முதல் பாதி சூப்பர்... 2-வது பாதி சுமார்: சிவா கோட்டை விட்டாரா?

    கங்குவா ஒரு ஃபேண்டஸி ஆக்‌ஷன் படமாகும், இது நல்ல கதையம்சத்துடன் இருக்கிறது. ஆனால் விகாரமான முறையில் இயக்கப்பட்டது. சூர்யா தனது பாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார், அவருடைய முயற்சிகள் பாராட்டப்பட வேண்டியவை, ஆனால் இது போன்ற ஸ்கிரிப்டை வெறும் நடிப்பால் காப்பாற்றுவது கடினம். படத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக சில கண்ணியமான காட்சிகள் உள்ளன ஆனால் இடையில் உள்ள மற்றவை மிகவும் பழமையான காட்சிகள். இது போன்ற படத்திற்கு தேவையான எமோஷனல் கனெக்டிவிட்டி முற்றிலும் இல்லை. இயக்குனர் சிவா முதல் பாதியில் ஓரளவு திரைக்கதையை ஒன்றாக இணைத்துள்ளார், ஆனால் இரண்டாவது பாதியில் அதை வீணடித்துள்ளார். இது ஒரு கட்டத்திற்குப் பிறகு தியேட்டரில் உட்காருவதை கடினமாக மாற்றுகிறது. பின்னணி இசை சில இடங்களில் சிறப்பாக இருந்தாலும், மிகவும் சத்தமாக உள்ளது. மற்றவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தாது. தயாரிப்பு மதிப்புகள் நன்றாக உள்ளன. குறி வரை இல்லை! மதிப்பீடு: 2.25/5



  • Nov 14, 2024 10:55 IST

    முதல் பாதி தொடக்கம் சூப்பர்: 2-வது பாதி எப்படி?

    கங்குவா சராசரி முதல் பாதி! திரைப்படம் ஒரு சில நல்ல தொடக்கத்தை  கொண்டுள்ளது மற்றும் குறிப்பிட்ட கால அறிமுகக் காட்சிகள் நன்றாக இருக்கிறது. இருப்பினும், ஒரு குறிப்பிட்ட கட்டத்திற்குப் பிறகு படம் மேல் எரிச்சலை ஏற்படுத்துகிறது. பின்னணி இசை ஹிட் அல்லது மிஸ்ஸாக இருந்தாலும் சில நேரங்களில் மிகவும் சத்தமாக இருக்கும். கங்குவாவாக சூர்யா நன்றாக இருக்கிறார். 2வது பாதி எதிர்பார்ப்பை வைத்திருக்கிறது.



  • Nov 14, 2024 10:41 IST

    கங்குவா ரசிகர்கள் ரிவ்யூ



  • Nov 14, 2024 10:39 IST

    பாசிட்டீவ் ரெஸ்பான்ஸ்: கங்குவா படம் எப்படி?



  • Nov 14, 2024 10:38 IST

    கங்குவா படத்திற்கு ஆதரவாக எலான் மஸ்க்



  • Nov 14, 2024 09:48 IST

    ரொம்ப சந்தோஷமா இருக்கு: சென்னை காசி திரையரங்கில் இயக்குனர் சிவா பேட்டி

     ‘கங்குவா’ படத்தின் முதல் காட்சியை பார்க்க சென்னை காசி திரையரங்கிற்கு வந்த இயக்குநர் சிவா, “USல படம் பார்த்த நண்பர்கள் ஃபோன் பண்ணாங்க.. மிகப்பெரிய வெற்றிப் படம்னு சொல்றாங்க.. ரொம்ப சந்தோஷமா இருக்கு என்று கூறியுள்ளார்.



  • Nov 14, 2024 09:43 IST

    நான் பெற்ற இன்பம் இந்த வையகமும் பெற



  • Nov 14, 2024 09:42 IST

    கங்குவா வரலாற்று வெற்றி



  • Nov 14, 2024 09:41 IST

    கங்குவா சூரியாவின் வெறியாட்டம்

    பிரம்மாண்டமான காட்சிப்படுத்துதல், கிராபிக்ஸ்தான்னு நினைக்க வைக்காத விதம், எல்லாத்துக்கும் மேல கங்குவாவா வர்ற சூரியா.. வெறியாட்டம் ஆடிருக்காரு.. நடிப்பு மற்றும் அதற்கான உழைப்பு.. fantasy kinda hero எப்படி எல்லாத்தையும் சாதிக்கனுமோ, அதை சரியா சுமந்திருக்கார். வெல்டன் சூரியா.



  • Nov 14, 2024 09:37 IST

    கங்குவா ரிலீஸ்: பட்டனை மாற்றிய எலான் மஸ்க்

    கங்குவா படத்தை கொண்டாடும் வகையில் எலோன் மஸ்க் லைக் பட்டனை மாற்றியுள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் . இது போலி இல்லை, உண்மைதான். நீங்கள் அதை முயற்சி செய்து , லைக் பட்டனை அழுத்தி கங்குவா ரிலீஸ் டிரெய்லரைக் கொண்டாடுங்கள் என்று ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.



Tamilnadu Tamil Cinema News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: