சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கியுள்ள கங்குவா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், திடீரென கங்குவா படத்தின் டிரெய்லர் வெளியிட்டு படக்குழுவினர் சூர்யா ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளனர்.
Advertisment
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் சூர்யாவுக்கு சமீபத்தில் எந்த படங்களும் வெளியாகவில்லை என்றாலும், அவர் நடித்து வரும் படங்கள் தொடர்பான தகவல்கள் அவ்வப்போது வெளியாகி அவரது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி வருகிறது. அந்த வகையில் தற்போது கங்குவா படம் குறித்த திடீர் அப்டேட் வெளியாகியுள்ளது.
சிறுத்தை, வீரம், விஸ்வாசம் உள்ளிட்ட சில வெற்றிப்படங்களை இயக்கிய இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில், தயாராகி வரும் படம் கங்குவா. ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரித்து வரும் இந்த படத்தில், சூர்யா நாயகனாக நடித்து வரும் நிலையில், பாலிவுட் நடிகர் பாலி தியோல் வில்லனாக நடித்து வருகிறார். மேலும் பாலிவுட் நடிகை திஷா பதானி, கருணாஸ், நட்டி நடராஜ், ஜெகபதி பாபு, யோகிபாபு, கோவை சரளா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்து வருகின்றனர்.
மேலும் சூர்யாவின் தம்பி கார்த்தி இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். படத்தின் தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள நிலையில், வரும் அக்டோபர் 10-ந் தேதி கங்குவா படம் பிரம்மாண்டாக வெளியாக உள்ளது. 10 மொழிகளில் வெளியாக உள்ள இந்த படம் குறித்து பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், இதற்கு முன்பு வெளியான படம் டீசர் மற்றும் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் இணையத்தில் வைரலாக பரவி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிந்தது.
Advertisment
Advertisements
அந்த வகையில் தற்போது கங்குவா படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. முழுக்க முழுக்க காடுகளில் படமாக்கப்பட்ட இந்த படத்தின் டிரெய்லர் முழுவதும் காடு மற்றும் இயற்கை கார்ந்த காட்சிகளால் நிரம்பியுள்ளது. வில்லன் பாபி தியோல், ஹீரோ சூர்யா ஆகியோர் ஆக்ஷன் காட்சிகளில் மிரட்டியுள்ள இந்த டிரெய்லர் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், சூர்யா ரசிகர்கள் உற்சாகத்தில் ஆழ்ந்துள்ளனர். டிரெய்லரில் உன் ரத்தமும் என் ரத்தமும் வெவ்வேறா என்ற சூர்யாவின் வசனம் கவனம் ஈர்த்து வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“