/indian-express-tamil/media/media_files/2025/04/19/VDlJf5JSg4wVhkp8wQBs.jpg)
பொதுவாக சினிமாவில், ஒரு இயக்குனர் கதை எழுதினால், அதை ஒரு நடிகரிடம் சொல்வதும், அவர் அந்த கதையில் நடிக்க முடியாமல் போனால் மற்ற நடிகர்களிடம் அந்த கதை போவதும் வழக்கம். இப்படி அந்த இயக்குனர் எந்த நடிகரை மனதில் வைத்து அந்த கதையை எழுதினாரோ அந்த நடிகர் நடிக்காமல் கடைசியில் வேறொருவர் நடிப்பில் வெளியாகி அந்த படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்துவிடும்.
அதன்பிறகு சில வருடங்கள் கழித்து அந்த இயக்குனரோ அல்லது அந்த கதையை நிராகரித்த நடிகரோ, இந்த கதையில் நான் தான் நடிக்க வேண்டியது. ஆனால் அப்போது முடியாமல் போய்விட்டது என்று சொல்வார்கள். ஆனால் இங்கு மிகப்பெரிய வெற்றிப்படத்தை கொடுத்த நடிகர் இந்த கதை தன்னிடம் வரும்போது, தான் இந்த கதைக்கு செட்டாக மாட்டேன். வேறோரு முன்னணி நடிகரை வைத்து படத்தை எடுங்கள் என்று கூறியுள்ளார். அந்த நடிகர் யார்? அது எந்த படம் என்பதை பார்ப்போம்.
தமிழ் சினிமாவில் ஸ்டைலிஷ் படங்களை இயக்குவதில் கைதேர்ந்தவர் கௌதம் மேனன். மின்னலே படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர், 2003-ம் ஆண்டு சூர்யா நடிப்பில் காக்க காக்க என்ற பிரம்மாண்ட வெற்றிப்படத்தை கொடுத்தார். கலைப்புலி தானு தயாரித்த இந்த படத்தில் ஜோதிகா, நடிகர் ஜீவன், டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் இந்த படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றிருந்தது.
தொடர்ந்து இந்த படம் தெலுங்கில் வெங்கடேஷ் நடிப்பில் குருஷேத்ரா, கன்னடத்தில் மறைந்த நடிகர் சிரஞ்சீவி சார்ஜா நடிப்பில், தண்டம் தஷகுணம் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு அங்கேயும் வெற்றியை பெற்றது. தனது 2-வது படத்திலேயே தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட வெ்றறியை பெற்ற இயக்குனர் கௌதம்மேனன், இந்த படத்தின் கதையை எழுதிவிட்டு பல நடிகர்களிடம் கூறியுள்ளார். ஆனால் பலரும் இந்த கதையை நிராகரித்துள்ளனர். இறுதியாக சூர்விடம் கதை கூறியுள்ளார்.
காக்க காக்க மாதவன் பண்ணனும்னு சொன்னாரு!
— Tamilnadu Now (@thetamilnadunow) May 27, 2025
Watch Full Video on Tamilnadu Now YouTube Channel#kakkakakka#Madhavan#Tamilcinema#Bucks#GVM#TamilNaduNowpic.twitter.com/zwXlkbjJvG
இந்த கதையை கேட்ட சூர்யா, கதை மிகவும் அருமையாக உள்ளது. ஆனால் நான் வளர்ந்து வரும் ஹீரோ இப்போது தான் எனக்கு ஒரு படம் வெற்றி (நந்தா) கிடைத்துள்ளது. என்னை இந்த படத்தில் ஹீரோவாக்கி நீங்கள் ரிஸ்க் எடுக்க வேண்டாம். மாதவனிடம் சொல்லி நடிக்க சொல்லுங்கள். அவர் இப்போ ஆக்ஷன் ஹீரோ (ரன் படம் வெளியான நேரம்) அவரை போன்று அடுத்த லெவலில் உள்ள நடிகர்கள் நடிக்க வேண்டிய கதை என்று கூறியுள்ளார். ஆனால் கௌதம் மேனன், நீங்கள் நடித்தால் சரியாக இருக்கும். ரொமான்டிக் ஹீரோவா இருக்கும் நீங்கள் ரப்பா பண்ணா படம் வித்தியாசமாக இருக்கும் என்று கூறியுள்ளார்.
அதன்பிறகு சூர்யா நடிக்க ஒப்புக்கொண்டு வெளியான படம் தான் காக்க காக்க. சூர்யாவின் திரை வாழ்க்கையில் இன்றுவரை, ஒரு பெயர் சொல்லும் படமாக காக்க காக்க படம் இருக்கிறது. 2003-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 1-ந் தேதி இந்த படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.