scorecardresearch

அடடே… சிவகுமார் குடும்பத்தில் 5-வது நடிகர்: சூர்யா மகனை இயக்குவது யார்?

Tamil Cinema Update : ஜெயம் ரவியை வைத்து கோமாளி என்ற பெரிய வெற்றிப்படத்தை இயக்கிய இயக்குனர் பிரதீப் ரங்கநானுடன் தேவ் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அடடே… சிவகுமார் குடும்பத்தில் 5-வது நடிகர்: சூர்யா மகனை இயக்குவது யார்?

Tamil Cinema Update : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா, ஜெய்’பீம் எதற்கும் துணிந்தவன் போன்ற வெற்றிப்படங்களை தொடர்ந்து தற்போது தனது 41வது படத்தின் படப்பிடிப்பிற்காக கன்னியாகுமரியில் முழு வீச்சிர் களமிறங்கியுள்ளார்.

சூர்யாவின் 1 எண்டர்டெய்ண்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தை இயக்குநர் பாலா இயக்குகிறார். கிருத்திகா ஷெட்டி நாயகியாக நடித்து வருகிறார். தொடர்ந்து சூர்யா அடுத்ததாக இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிக்க உள்ளார்.

இந்நிலையில் நடிகை ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட நடிகர் சூர்யாவுக்கு தியா என்ற மகளும் தேவ் என்ற மகனும் உள்னர். இதில் சூர்யா அப்பா சிவக்குமார், தம்பி கார்த்தி, மனைவி ஜோதிகா உட்ப 4 பேரும் திரைத்துரையில் இருந்து வரும் நிலையில், தற்போது 5-வது ஆளாக சூர்யாவின் மகன் தேவ் நடிகரான அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜெயம் ரவியை வைத்து கோமாளி என்ற பெரிய வெற்றிப்படத்தை இயக்கிய இயக்குனர் பிரதீப் ரங்கநானுடன் தேவ் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இளம் திரைப்பட தயாரிப்பாளரான தேவ்க்கும் மற்றொரு சிறு பையனுக்கும் இயக்குநர் பிரதீப் ஒரு காட்சியை விளக்குவது போன்ற புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

இதன் மூலம் பிரதீப் ரங்கநாதனின் புதிய படத்தில் தேவ் நடிகராக அறிமுகமாகிறார் என்று உறுதி செய்யப்படுகிறது. அதில் அவர் கதாநாயகனாகவும் நடிக்கிறார் என்ற தகவல் பரவி வருகின்றன. ஆனாலும் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil cinema actor surya son dev acting in comali director film