நான் இந்த இடத்திற்கு வர காரணம் என் நண்பர்கள்: இப்போவும் நான் தொடர்பில் இருக்கிறேன்: சிவகார்த்திகேயன்

மதராஸி படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா நிகழ்ச்சி கோவை சரவணம்பட்டியில் உள்ள எஸ்.என்.எஸ் கல்லூரியில் நடைபெற்றது.

மதராஸி படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா நிகழ்ச்சி கோவை சரவணம்பட்டியில் உள்ள எஸ்.என்.எஸ் கல்லூரியில் நடைபெற்றது.

author-image
WebDesk
New Update
Sikr

கல்லூரி காலத்தில் எனக்கு கிடைத்த நல்ல நண்பர்களால் தான் இந்த இடத்திற்க்கு தான் வந்துள்ளேன் என கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள எஸ்.என்.எஸ் கல்லூரியில், நடிகர் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

Advertisment

தமிழ் சினிமாவில் அனைவராலும் கொண்டாடப்படும் நடிகராக  சிவகார்த்திகேயன் உள்ளார். இவரது நடிப்பில், பிரபல இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 23-வது படமாக உருவாகி வரும் திரைப்படம் 'மதராஸி' இத்திரை திரைப்படம் வருகின்ற செப்டம்பர் 5 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில், வெளியாகிறது.

இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மினி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசை அமைத்துள்ளார். இந்த படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா நிகழ்ச்சி  கோவை சரவணம்பட்டியில் உள்ள எஸ்.என்.எஸ் கல்லூரியில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் படத்தின் நடிகர் சிவகார்த்திகேயன்  நடிகை ருக்குமணி ஆகியோர் கலந்து கொண்டு படத்தில் நடித்த அனுபவங்களை தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியின் வாயிலாக, மாணவ மாணவியர்கள் மத்தியில் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன்,  மதராஸி படம் சிறப்பாக வந்துள்ளது. 3 வருடங்களுக்கு பிறகு நானும் அனிருத்தும் இந்த திரைப்படத்தில், இணைந்து பணியாற்றியுள்ளோம்.

Advertisment
Advertisements

கல்லூரி காலத்தில் எனக்கு கிடைத்த நல்ல நண்பர்களால் தான், இந்த இடத்திற்க்கு தான் வந்துள்ளேன். கல்லூரி நண்பர்களுடன் இன்றும் இணைந்தே பயணித்து வருகிறேன். மனித வாழ்க்கையில் காதல் எவ்வளவு முக்கியமோ, அதே போலத்தான், இந்த படத்திலும் காதலை மையமாக வைத்து திரைக்கதையை தேர்வு செய்து படமாக எடுத்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்ச்சியின் போது படத்தின் ஒரு பாடலுக்கு கல்லூரி மாணவர்களுடன் நடனம் ஆடி கல்லூரி மாணவர்களை உற்சாகபடுத்தினார் மேலும் கல்லூரி மாணவர்களின் கேள்விக்கும் பதில் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Sivakarthikeyan

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: