கை மட்டும் தான் நான், ஆட்டோ ஓட்டியது அவர்தான்; சக நடிகருக்காக அஜித் செய்த வேலை: தீனா மெமரீஸ்

அஜித் தனது வயதை எப்போதும் மறைத்ததே இல்லை என்பதற்கு அடையாளமாக இந்த படத்தில் தனது வயதை 28 என்று கூறியிருப்பார்.

அஜித் தனது வயதை எப்போதும் மறைத்ததே இல்லை என்பதற்கு அடையாளமாக இந்த படத்தில் தனது வயதை 28 என்று கூறியிருப்பார்.

author-image
WebDesk
New Update
Ajith Thadi balaji

தமிழ் சினிமாவில், அதிக ரசிகர்கள் பட்டாளம் வைத்துள்ள முக்கிய நடிகர்களில் ஒருவர் அஜித்குமார், அவருடன் நடிக்க வேண்டும் என்று பல நடிகர்கள் ஆசைப்படுகின்றனர். அதே சமயம், அவருடன் நடித்தவர்கள் அவரின் கேரக்டர் குறித்து புகழ்ந்து பேசி வருகின்றனர். அந்த வகையில் நடிகர் தாடி பாலாஜி ஒரு நிகழ்வை குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

தமிழ் சினிமாவில் விஜய்க்கு போட்டி நடிகர் என்று அறியப்படும் அஜித், பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். அதேபோல், எஸ்.ஜே.சூர்யா, சரண், ஏ.எல்.விஜய் உள்ளிட்ட புதுமுக இயக்குனர்களுக்கு முதல் படம் இயக்கும் வாய்ப்பை கொடுத்துள்ள அஜித், கடந்த 2001-ம் ஆண் தீனா என்ற படத்தில் நடித்திருந்தார். அஜித்குமார், மலையாள நடிகர் சுரேஷ் கோபி, லைலா, ஸ்ரீமன், ராஜேஷ், பாலா சிங் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்த இந்த படத்தில் அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. ஆக்ஷன் காமெடி என அஜித் இந்த படத்தில் சிறப்பாக நடித்திருந்தார் என்று ரசிகர்கள் பலரும் பாராட்டுக்களை தெரிவித்திருந்தனர். அதேபோல் அஜித் தனது வயதை எப்போதும் மறைத்ததே இல்லை என்பதற்கு அடையாளமாக இந்த படத்தில் தனது வயதை 28 என்று கூறியிருப்பார். இதை ஷாட்ஸ்களாக யூடியூப்பில் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

இந்த படத்தில் அஜித்தின் நண்பர்களாக ஸ்ரீமன் மற்றும் தாடி பாலாஜி ஆட்டோ டிரைவர்களாக நடித்திருந்தனர். படத்தின் படப்பிடிப்பின்போது, தாடி பாலாஜி தனக்கு ஆட்டோ ஓட்ட தெரியாது என்று கூறியுள்ளார். இதை கேட்ட ஏ.ஆர்.முருகதாஸ், கடுப்பில், ஆட்டோ ஓட்ட தெரியாதா என்ன இப்படி இருக்கீங்க, அதை கூட கற்றுக்கொள்ளவில்லையா? என்று சொல்ல, எனக்கு தெரியாது சார் என்று தாடி பாலாஜி கூறியுள்ளார். இதை கேட்ட முருதாஸ் வேறு வேலையில் பிஸியாகியுள்ளார்.

Advertisment
Advertisements

தாடி பாலாஜி மனம் திறந்த பேச்சு 💯 தல ஆரம்பிச்சு வச்ச வாழ்க்கை எல்லாருக்கும் நல்லா தான் இருக்கும்🙏 அந்த மனசு தான் கடவுள் 🙏🙏🙏

Posted by TamilnaduThalafoundation on Saturday, April 19, 2025

அதன்பிறகு இந்த பஞ்சாயத்து நடிகர் அஜித்திடம் சென்றுள்ளது. இதை கேட்ட அஜித், தாடி பாலாஜியை மேலும் கீழும் பார்துவிட்டு, ஒன்னும் இல்ல அவர் கையை வச்சிக்கோங்க, நான் ஓட்டிக்கிறேன். அதன்படி, தாடி பாலாஜி ஆட்டோவை ஸ்டார்ட் செய்வது போன்று எடுத்துவிட்டு, ஆட்டோவை அஜித் ஓட்டியுள்ளார். அன்றைக்கு தல ஸ்டார்ட் செய்துவிட்ட வண்டி இன்றுவரை ஓடிக்கொண்டு இருக்கிறது என்று தாடி பாலாஜி ஒரு பேட்டியில் கூறியுள்ளார். 

Thala Ajith

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: