நடிகர் தர்ஷன் குடியிருக்கும் வீட்டில் அருகே பார்க்கிங் செய்வது தொடர்பான தகராறில், ஐகோர்ட் நீதிபதி மகனுக்கும் இவருக்கும் இடையே மோதல் வெடித்துள்ளதால், இருவரும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் தர்ஷன். அதனைத் தொடர்ந்து கே.எஸ்.ரவிக்குமார் தாயரித்த கூகுள் குட்டப்பா என்ற படத்தின் மூலம் நாயகனாக நடித்திருந்தார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பிக்பாஸ் லாஸ்லியா நடித்திருந்தார். இந்த படம் ஓரளவு வரவேற்பை பெற்றிருந்த நிலையில், அடுத்து நாடு என்ற படத்தில் தர்ஷன் நடித்திருந்தார். கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட இந்த படம் விமர்சனரீதியாக பாராட்டுக்களை பெற்றிருந்தது.
இதன்பிறகு தர்ஷன் நடிப்பில் இதுவரை எந்த படமும் வெளியாகாத நிலையில், அவரை சுற்றி சர்ச்சைகள் அவ்வப்போது எழுந்து வருகிறது. ஏற்கனவே நடிகை சனம் ஷெட்டியை திருமணம் செய்துகொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டார் என்று அளித்த புகாரின் பேரில், தர்ஷன் மீது 3 பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதனிடையே தற்போது தர்ஷன் மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். தர்ஷன் குடியிருக்கும் வீட்டில் அருகே காரை பார்க்கிங் செய்வது தொடர்பாக நீதிபதி மகனுக்கும் தர்ஷனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்த மோதலில் ஒரு பெண் மற்றும் நீதிபதியின் மகன் காயமடைந்த நிலையில், இருவரும் சென்னை அண்ணா நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தர்ஷன் தனது நண்பர்களுடன் சேர்த்து தன்னை தாக்கியதாக நீதிபதியின் மகன் ஜே.ஜே.நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள நிலையில், நடிகர் தர்ஷனும் தனது தரப்பில் இருந்து புகார் அளித்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இது குறித்மது காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனறனர்.
வீட்டுக்கு முன் காரை நிறுத்தியதால், காரை எடுக்க சொன்னபோது தனது தம்பியை தாக்கிவிட்டதாக தர்ஷனும், நாங்கள் காரை எடுக்க சென்றபோது, அவர்கள் தங்களை தரக்குறைவாக பேசினார்கள் என்று நீதிபதியின் மகனும் கூறியிருப்பததால், இந்த நிகழ்ச்சியில் என்ன நடந்தது என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில், தற்போது தர்ஷன் கைது செய்யப்பட்டு அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.